Published:Updated:

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கிரிமினல்களும், சில அரசியல் கனவுகளும் | மினி தொடர் - 2

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப்பில் கிரிமினலாக இருந்தவன், அரசியல்வாதியாக முயன்று, அதில் தோல்வியடைந்தான்... பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்... பகுதி 2

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: கிரிமினல்களும், சில அரசியல் கனவுகளும் | மினி தொடர் - 2

பஞ்சாப்பில் கிரிமினலாக இருந்தவன், அரசியல்வாதியாக முயன்று, அதில் தோல்வியடைந்தான்... பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்... பகுதி 2

Published:Updated:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சித்து மூஸ் வாலா கொலையும் வெளிவந்த கேங் வார்களும்... மினி தொடரின் முதல் பாகத்தை படிக்க கீழே க்ளிக்கவும்...!

*************

பஞ்சாப்பில் அரசியல்ரீதியாகவும், எதிரிகள் மூலமாகவும் அச்சுறுத்தல் அதிகரித்ததால் பிரப்ஜிந்தர் சிங் பஞ்சாப்பை காலி செய்து பாதுகாப்பு கருதி உத்தரப்பிரதேசத்தில் தஞ்சமடைந்தார். உத்தரப்பிரதேசத்தில் முக்தார் அன்சாரி என்ற கிரிமினலுடன் சேர்ந்துகொண்டு வழக்கம்போல் மிரட்டிப் பணம் பறித்தல், கூலிக்குக் கொலை செய்தல், ஆள் கடத்தல் போன்ற காரியங்களில் ஈடுபட்டு வந்தார். கர்நாடகாவில் வைர வியாபாரி ஒருவரைக் கடத்த திட்டமிட்டபோது கர்நாடகா போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டார். பின்னர் டெல்லியிலிருந்து ஹரியானாவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு போலீஸ் காவலிலிருந்து தப்பிவிட்டார். வேறு ஒரு வழக்கில் பல ஆண்டுகள் கழித்து கைதுசெய்யப்பட்ட சிங் 2004-ம் ஆண்டு பாட்டியாலா சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டபோது அவரை வரவேற்க 500 கார்கள் சிறைக்கு வந்திருந்தன. ஆனால் 2006-ம் ஆண்டு சண்டிகரில் பிரப்ஜிந்தர் சிங்கின் முன்னாள் கூட்டாளி ராக்கி பாசில்காவின் ஆட்கள் மூலம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பிரப்ஜிந்தர் சிங்
பிரப்ஜிந்தர் சிங்

ராக்கியும் ஆரம்பத்தில் பிரப்ஜிந்தர் சிங் கூட்டத்தில்தான் வேலை செய்தார். ஆனால் சிங் கொலை செய்யப்பட்ட பிறகு ராக்கி தனியாக தனது கூட்டத்தைத் தொடங்கினார். இந்தக் கூட்டத்தில் ஷேரா குபன், ஜெய்ப்பால், விக்கி கவுண்டர் ஆகியோர் முக்கிய அங்கம் வகித்தனர். அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் மிரட்டிப் பணம் பறித்தல், ஆள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத நடவடிக்கைகளில் அதிக அளவில் ஈடுபட்டனர்.

ராக்கி குற்றங்களில் ஈடுபட்டாலும், அது தனக்கு நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பாக இருக்காது என்பதை உணர்ந்து மெதுவாகத் தனது பயணத்தை அரசியல் பக்கம் திருப்பினார்.

அதேசமயம் லாரன்ஸ் பிஸ்னோய் போன்ற ஒருசில கூட்டத்தினரை மட்டும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு குற்றங்களையும், அரசியலையும் சேர்த்து செய்தார் ராக்கி.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கருத்து வேறுபாடு காரணமாக ஷேரா குபன், விக்கி ஆகியோர் ஜெய்ப்பால் சிங்குடன் சேர்ந்துகொண்டு தனி சாம்ராஜ்யம் நடத்த ஆரம்பித்தனர். இதனால் ராக்கி அரசியலில் தனது கவனத்தை தீவிரப்படுத்தினார். அதோடு சாராய வியாபாரி சிவ்லால் தோடா, சிரோண்மனி அகாலிதளம் கட்சியுடன் தனது நெருக்கத்தை அதிகரித்துக்கொள்வதில் கவனம் செலுத்தினார். 2012-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அகாலி தளம் சார்பாக போட்டியிட முயன்றார். ஆனால் பாசில்கா தொகுதி பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டதால் ராக்கி சுயேச்சையாகப் போட்டியிட்டு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

மற்றொரு புறம் ராக்கியைக் கொலை செய்ய விக்கியும், ஜெய்ப்பாலும் தகுந்த நேரம் பார்த்துக்கொண்டிருந்தனர். 2012-ம் ஆண்டு ஷேரா குபன் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவர் இருக்கும் இடம் குறித்து ராக்கிதான் போலீஸாருக்குத் தகவல் கொடுத்திருக்க வேண்டும் என்று விக்கியும், ஜெய்ப்பாலும் நினைத்தனர். எனவேதான் 2016-ம் ஆண்டு ராக்கி இமாச்சல பிரதேசத்திலிருந்து சண்டிகர் சென்று கொண்டிருந்தபோது விக்கி, ஜெய்ப்பாலின் ஆட்கள் வழிமறித்து அவரைக் கொலை செய்தனர். அதோடு கொலை செய்த பிறகு `இனி எம்.எல்.ஏ.ஆவாயா?’ என்று ஃபேஸ்புக்கில் விக்கி பதிவிட்டிருந்தார். ராக்கி இறைபக்தியில் அதிக ஈடுபாடு கொண்டவர். ராக்கியின் அரசியல் பயணத்தைத் தற்போது அவரின் சகோதரி ராஜ்தீப் கவுரி தொடர்ந்துவருகிறார்.

முதல்வர் சுக்பிர் சிங் பாதலுடன் ராக்கி
முதல்வர் சுக்பிர் சிங் பாதலுடன் ராக்கி

விக்கி...

ராக்கியைக் கொலை செய்த விக்கி ஒரு சிறந்த விளையாட்டு வீரர். வட்டு எறிதலில் பல தங்கப் பதக்கங்களை வாங்கியிருக்கிறார். விளையாட்டு வீரராக இருந்த விக்கி எப்படி கிரிமினலாக மாறினார் என்பது ஒரு பெரிய கதை. விக்கியின் உண்மையான பெயர் ஹர்ஜிந்தர். விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக எப்போதும் மைதானத்திலேயே இருப்பார். அதனால்தான் அவரை அவருடைய நண்பர்கள் `கிரவுண்டர்’ என்றே அழைத்தனர். அது நாளடைவில் `கவுண்டர்’ என்றாகிவிட்டதாம். ஜலந்தரில் பயிற்சிக்காகச் சென்ற விக்கி தேசிய அளவில் நடந்த வட்டு எறிதலில் 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள் வென்றிருக்கிறார். அப்படிப்பட்ட விளையாட்டு வீரர் கிரிமினலாகி பஞ்சாப்பில் சிறையை உடைத்துக்கொண்டு ஆறு பேருடன் வெளியில் வந்தார். அவர் எப்படி வந்தார் என்பது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்...

தொடரும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism