Published:Updated:

மும்பை: பூஜையின்போது ஆடையில் தீப்பிடித்தது! - மாநகராட்சி முன்னாள் கமிஷனர் உடல் கருகி பலி

நளினக்‌ஷன்
நளினக்‌ஷன்

மும்பையில் முன்னாள் மாநகராட்சி கமிஷனர் பூஜையின்போது ஆடையில் தீப்பிடித்துக்கொண்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

மும்பையில் 1999-01ம் ஆண்டு வரை மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் நளினக்‌ஷன்(79). இவர் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு சொந்த ஊரான கேரளாவுக்குச் செல்லாமல் தொடர்ந்து மும்பை சர்ச்கேட் பகுதியில் வசித்துவந்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்றபிறகு, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நளினக்‌ஷன், தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு சாமிக்கு பூஜை செய்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

நளினக்‌ஷன்
நளினக்‌ஷன்

புதன் கிழமை காலையிலும் அதே போன்று குளித்துவிட்டு பூஜையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பூஜை அறையிலிருந்த விளக்கில் இருந்த தீ, நளினக்‌ஷன் லுங்கியில் பற்றிக்கொண்டது. அவர் அவசரத்தில் தீயை அணைக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக பூஜை அறைக் கதவு உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டது. சம்பவம் நடந்தபோது அனைவரும் வீட்டில் இருந்தபோதும் அவர்களால் உடனே அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மாற்றுச்சாவி மூலம் கதவைத் திறந்தபோது அவரின் லுங்கி தீப்பற்றி எரிந்திருந்தது. லுங்கியை அவர் பெல்ட்டால் இறுகக் கட்டியிருந்ததால் அதை உடனே அவிழ்க்க முடியவில்லை. அவரை குடும்பத்தினர் அருகிலுள்ள பைகுலா மசினா மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 90 சதவிகிதம் அளவுக்கு தீக்காயம் அடைந்திருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனலிக்காமல் வெள்ளிக்கிழமை மாலையில் உயிரிழந்துவிட்டார்.

அவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். ஒரு மகன் ஹாங்காங்கில் இருக்கிறார். இது குறித்து அவரது மகன் ஸ்ரீஜித் கூறுகையில், ``எனது தந்தை எப்போதும் பூஜையை மறந்ததில்லை. அவர் பூஜையில் இருந்தபோது லுங்கியில் தீப்பிடித்துக்கொண்டது” என்று தெரிவித்தார்.

"தேவ பிரசன்னம் முடிந்த பின் விசாரணை அறிக்கை..."- மண்டைக்காடு தீ விபத்து குறித்து அமைச்சர் சேகர்பாபு!
அடுத்த கட்டுரைக்கு