Published:Updated:

``கே.ஒய்.சி அப்டேட் பண்ணணும் லிங்க்கை க்ளிக் பண்ணுங்க!" - வினோத் காம்ப்ளியிடம் ரூ.1.14 லட்சம் மோசடி!

வினோத் காம்ப்ளி
News
வினோத் காம்ப்ளி

கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளியிடம் வங்கி அதிகாரி என்று கூறி மர்ம நபர் ரூ.1.14 லட்சத்தை மோசடி செய்துவிட்டார்.

ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நன்றாகப் படித்தவர்கள்கூட ஆன்லைன் மோசடிப் பேர்வழிகளின் பேச்சில் மயங்கிவிடுகின்றனர். அது போன்ற ஒரு மோசடிதான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கும் நடந்திருக்கிறது. மும்பை பாந்த்ராவில் வசிக்கும் வினோத் காம்ப்ளியை மர்மநபர் ஒருவர் போனில் தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். அவர், தான் வினோத் காம்ப்ளி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டார். உங்கள் கே.ஒய்.சி (KYC) விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று கூறிய அந்த நபர், தான் அனுப்பும் லிங்க்கை க்ளிக் செய்து விவரங்களைப் புதுப்பிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

வினோத் காம்ப்ளி
வினோத் காம்ப்ளி

வினோத் காம்ப்ளியும் வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, மர்மநபர் அனுப்பிய லிங்க்கை க்ளிக் செய்தார். பின்னர், வினோத் காம்ப்ளி லிங்க்கை க்ளிக் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.14 லட்சம் எடுக்கப்பட்டுவிட்டதாக அவருக்குக் குறுந்தகவல் வந்திருக்கிறது. அதையடுத்து, வினோத் இது குறித்து உடனே தன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், மேற்கொண்டு மோசடி நடக்காமல் தடுத்தனர். அதைத் தொடர்ந்து, வினோத் காம்ப்ளி சைபர் பிரிவு போலீஸில் உடனே புகார் செய்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து வினோத் காம்ப்ளி கூறுகையில், ``ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துவருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என் பணம் திரும்பக் கிடைத்துவிட்டது. ஆனால், இந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் குற்றவாளி யார் என்பதையே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். போலீஸார் எனக்குப் பணம் திரும்பக் கிடைக்க முழு உதவி செய்தனர். ஆன்லைன் மோசடிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

ஆன்லைன் மோசடி
ஆன்லைன் மோசடி

இது குறித்துப் பேசிய சில காவல்துறை அதிகாரிகள், ``கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் நண்பரான வினோத் காம்ப்ளி மட்டுமல்லாமல், பல முக்கியப் பிரமுகர்கள் ஆன்லைன் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்திருக்கின்றனர். முன்பின் தெரியாதவர்கள் கேட்கும்போது 'ஒ.டி.பி' எண்களை கொடுக்க கூடாது என்றும், லிங்குகளை க்ளிக் செய்யக் கூடாது என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், மர்மநபர்கள், அனுப்பும் லிங்க்கோடு சேர்த்து போனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் ஆப்பையும் சேர்த்து அனுப்பிவிடுகின்றனர். அதன் மூலம் லிங்க் க்ளிக் செய்யப்பட்டவுடன் போனைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, அதிலிருக்கும் விவரங்களைக் கொண்டு பணத்தை எடுத்துவிடுகின்றனர்’’ என்றனர்.