Published:Updated:

குஜராத்: மண்ணுக்குள் அழுகைச் சத்தம்; புதைக்கப்பட்ட பெண் குழந்தை... உயிருடன் மீட்ட விவசாயி!

உயிருடன் புதைக்கப்பட்ட கைக்குழந்தை ( ட்விட்டர் )

குஜராத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்திலுள்ள கம்போய் கிராமத்தைச் சேர்ந்தவர் கோகிலாபென். விவசாயியான இவர், தனது விவசாய நிலத்துக்குச் சென்றிருக்கிறார். அப்போது அந்தப் பகுதியிலிருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டிருக்கிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த விவசாயி குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கும் இடத்தைத் தேடிச் சென்றிருக்கிறார். அங்கு சென்று அவர் பார்த்தபோது, மண்ணுக்குள்ளிருந்து குழந்தையின் அழுகைச் சத்தம் வந்திருக்கிறது. இதனால் அச்சமடைந்த அவர் அருகிலுள்ள மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் இது குறித்துத் தெரிவித்திருக்கிறார்.

குழந்தை
குழந்தை

அங்கு வந்த ஊழியர்கள் அழுகைச் சத்தம் கேட்கும் இடத்தை வேகமாக தோண்டினார்கள். அந்தக் குழிக்குள் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைக் கண்ட மக்கள் உடனடியாக குழந்தையை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தற்போது அந்தப் பெண் குழந்தைக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருகின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த போலீஸார் வழக்கு பதிவுசெய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை செய்தனர். பிறந்து சில நாள்களே ஆன குழந்தை மண்ணில் உயிருடன் புதைக்கப்பட்ட செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!