Published:Updated:

தெலங்கானா: மெட்டல் கம்பியில் துணி போட்டதால் பாய்ந்த மின்சாரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கமரெட்டி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

தெலங்கானா: மெட்டல் கம்பியில் துணி போட்டதால் பாய்ந்த மின்சாரம்; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

கமரெட்டி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

Published:Updated:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

தெலங்கானா முழுவதும் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், கமரெட்டி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி இரண்டு குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பர்வீன் என்ற பெண் துணிகளை துவைத்து காயப் போடுவதற்காக உலோக கம்பியைப் பயன்படுத்தியிருக்கிறார். அப்போது, அந்த உலோக கம்பியில் எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. துணியை அதில் போட்ட மாத்திரத்தில் பர்வீன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பர்வீன்மீது மின்சாரம் பாய்ந்து அவர் துடிப்பதைக் கண்ட, அவரின் கணவர் மற்றும் இரு குழந்தைகள், அவரைக் காப்பாற்ற முயற்சி செய்தனர்.

அப்போது அவர்கள்மீதும் மின்சாரம் பாய்ந்து பர்வீனின், கணவர் மற்றும் இரு குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரணம்
மரணம்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த நிலையில், இது தொடர்பாக காமரெட்டி காவல் கண்காணிப்பாளர் பி.ஸ்ரீனிவாஸ் ரெட்டி, ``இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளன. குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 174-ன் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!