Published:Updated:

நெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல்! - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?

கொலை - கைது ( representational image )

சிறையில் கொல்லப்பட்ட முத்து மனோ கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலையைச் செய்தவர்கள் தஞ்சாவூரில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டனர்.

நெல்லையில் கொலை; தஞ்சையில் பதுங்கல்! - 4 கொலையாளிகள் பிடிபட்டது எப்படி?

சிறையில் கொல்லப்பட்ட முத்து மனோ கொலைக்குப் பழிவாங்கும் நோக்கத்துடன் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவர் கொல்லப்பட்டார். அந்தக் கொலையைச் செய்தவர்கள் தஞ்சாவூரில் பதுங்கியிருந்தபோது பிடிபட்டனர்.

Published:Updated:
கொலை - கைது ( representational image )

பாளையங்கோட்டை மத்திய சிறையில் ஏப்ரல் 22-ம் தேதி அடைக்கப்பட்ட முத்து மனோ என்பவரை அங்கிருந்த கைதிகள் சிலர் சிறையின் உள்ளேயே அடித்துக் கொலை செய்தனர். இந்தச் சம்பவத்துக்குப் பழிதீர்க்கும் வகையில் நெல்லை தாழையூத்து பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற கட்டட ஒப்பந்ததாரரைச் சிலர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார்கள்.

கொலைசெய்யப்பட்ட கான்ட்ராக்டர் கண்ணன்
கொலைசெய்யப்பட்ட கான்ட்ராக்டர் கண்ணன்

கட்டட கான்ட்ராக்டர் கண்ணன் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் ஊசிப்பாண்டியன், தீபக் ராஜா உள்ளிட்ட சிலர் ஈடுபட்டதாக, கண்ணனின் உறவினர்கள் குற்றம்சாட்டினார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்ணன் கொலையில் தொடர்புடைய சிலர் களக்காடு மலைப்பகுதியில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து ட்ரோன் கேமரா மூலம் போலீஸார் சோதனை நடத்தினார்கள். ஆனால் குற்றவாளிகள் யாரும் சிக்கவில்லை.

கொலை நடந்த இடம் (பழைய படம்)
கொலை நடந்த இடம் (பழைய படம்)

இந்தநிலையில், ஏற்கெனவே பிடிபட்ட குற்றவாளிகள் சிலரின் செல்போன்களை போலீஸார் கண்காணித்தனர். அப்போது குறிப்பிட்ட ஒருவருக்கு வந்த போன் கால் எங்கிருந்து பேசப்பட்டிருக்கிறது என்பதைக் கண்காணித்தபோது தஞ்சாவூர் பகுதியிலிருந்து ஒருவர் பேசியது தெரியவந்தது. அதனால் நெல்லை போலீஸார் தஞ்சாவூர் போலீஸாரின் உதவியுடன் அங்கு சோதனை நடத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தஞ்சாவூர் நடுகாவேரி பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தவர்களை உள்ளூர் போலீஸாரின் துணையுடன் தனிப்படை போலீஸார் சுற்றி வளைத்தனர். அங்கிருந்தவர்கள் தப்பியோட முயன்றபோது துப்பாக்கிமுனையில் நான்கு பேரை போலீஸார் மடக்கிப் பிடித்து கைதுசெய்தார்கள்.

பிடிபட்டவர்கள் ஊசிப்பாண்டியன் (வயது 37), தீபக் ராஜா (27), நாராயணன் (26), மணிகண்டன் (34) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களைக் கைதுசெய்ததுடன் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நடுக்காவேரியைச் சேர்ந்த தீபக் என்பவரும் கைதானார். அவர்களிடம் நடத்திய விசாரணையில், முத்து மனோ கொலைக்குப் பழிதீர்க்கும் நோக்கத்தில் கான்ட்ராக்டர் கண்ணனைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பிடிபட்டவர்களை நெல்லைக்குக் கொண்டுவந்து விசாரணை நடத்த போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism