Published:Updated:

பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்! - அத்திவரதர் தரிசனத்தில் பதற்றம்

JAYAVEL B

அத்திவரதர் தரிசனத்தில் பட்டாக்கத்தியுடன் நான்கு பேர் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்
பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்

அத்திவரதர் தரிசனத்தின் 32வது நாளான இன்று மிதமான கூட்டம் இருந்தது. விஐபி மற்றும் விவிஐபி வழியாகவும் இன்று எளிதாக தரிசனம் செய்ய முடிந்தது. தகவல் அறிந்து உள்ளூர் மக்களும் விரைவாக தரிசனம் செய்ய காஞ்சிபுரம் வந்திருந்தார்கள். நின்ற கோலத்தில் அத்திவரதர் 17 நாள்கள் மட்டுமே தரிசனம் தருவதால் வரக்கூடிய நாள்களிலும் மக்கள் அதிக அளவு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்
பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்

அத்திவரதர் தரிசனத்திற்கு 4500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் வெளிமாவட்டத்திலிருந்து 3000 காவலர்களை கூடுதலாக பாதுகாப்புப் பணிக்கு வரவழைத்துள்ளனர். அனைத்துத் தெருக்களிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் காஞ்சிபுரம் தெருக்களில் காவலர்களின் கெடுபிடி இருந்து வருகிறது.

அத்திவரதர் தரிசனத்திற்கு வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இரண்டு இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கு இடமான நான்கு பேரை மடக்கிய போது அவர்களிடம் இரண்டு பட்டாக்கத்திகள் இருந்தன. உடனடியாக அவர்களை மடக்கிப்பிடித்த காவலர்கள் அவர்களை அங்கேயே உட்கார வைத்தனர்.

பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்
பட்டாக்கத்தியுடன் சிக்கிய நான்கு பேர்

இதனால் அப்பகுதியாகச் சென்ற பக்தர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள். விஐபி கார் நுழைவுப் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டதால் முக்கியப் பிரமுகர்களை கொலை செய்ய வந்தார்களா எனக் காவல்துறையினர் சந்தேகமடைந்துள்ளனர்.