Published:Updated:

கான்வென்ட்டில் புகுந்து சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை - ஃபேஸ்புக் பழக்கத்தால் நேர்ந்த கொடூரம்

கான்வென்ட் மாணவிகள் பாலியல் வன்கொடுமை!

கான்வென்ட்டுக்குள் சென்று, மூன்று சிறுமிகளுக்கு பலவந்தமாக மது கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி போலீஸாரை அதிரவைத்தனர்.

கான்வென்ட்டில் புகுந்து சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை - ஃபேஸ்புக் பழக்கத்தால் நேர்ந்த கொடூரம்

கான்வென்ட்டுக்குள் சென்று, மூன்று சிறுமிகளுக்கு பலவந்தமாக மது கொடுத்து, பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி போலீஸாரை அதிரவைத்தனர்.

Published:Updated:
கான்வென்ட் மாணவிகள் பாலியல் வன்கொடுமை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் கடினங்குளம் பகுதியில் கான்வென்ட் ஒன்று செயல்பட்டுவருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு இரவு கான்வென்ட் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரோட்டோரம் கான்வென்ட் சுவரை ஒட்டி ஒரு பைக் கேட்பாரற்று நின்றுகொண்டிருந்தது. அந்த பைக் குறித்த விவரங்களைப் பெற போலீஸார் முயன்றுகொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் கான்வென்ட்டுக்குள்ளிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து நான்குபேர் வெளியே ஓடினர். பைக் பற்றி விசாரித்துக்கொண்டிருந்த போலீஸார் அந்த நான்கு பேரையும் மடக்கி பிடித்தனர். அப்போது ரோட்டோரம் நின்ற பைக் அந்த வாலிபர்களுடையது எனத் தெரியவந்தது. நான்கு வாலிபர்களும் கான்வென்ட்டுக்குள் திருடிவிட்டுத்தான் சுவர் ஏறி குதித்து வெளியே வந்திருக்கின்றனர் என நினைத்த போலீஸார் அவர்களைக் காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

கைதுசெய்யப்பட்ட வாலிபர்கள்
கைதுசெய்யப்பட்ட வாலிபர்கள்

விசாரணையில் அந்த வாலிபர்கள் வலியதுறை பகுதியைச் சேர்ந்த மேர்சன் (23), அருண் (21), ரஞ்சித் (26), டேனியல் (20) என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் கான்வென்ட்டுக்குள் சென்று மூன்று சிறுமிகளுக்கு பலவந்தமாக மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் கூறி போலீஸாரை அதிரவைத்தனர். கான்வென்ட்டில் தங்கிப் படிக்கும் மூன்று சிறுமிகள் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமானதாகவும், அவர்களைச் சந்திக்க சுவர் ஏறிக் குதித்து கான்வென்ட்டுக்குள் சென்றதாகவும், பின்னர் அந்தச் சிறுமிகளுக்கு மது கொடுத்து வன்கொடுமை செய்ததாகவும் வாலிபர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து போலீஸார் கான்வென்ட்டுக்குள் சென்று பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் வாக்குமூலம் பெற்றனர். மேலும் அவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அதைத் தொடர்ந்து நான்கு வாலிபர்கள் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்தபோலீஸார், அவர்களை ஆற்றிங்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.