Published:Updated:

சாத்தூர்: அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி - கோயில் பூசாரிமீது வழக்கு

காவல் நிலையம்

"இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நகைகளைக் கையாடல் செய்த வழக்கில் ராமர் பூசாரி அறங்காவலர்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும், கோயில் பூஜை முறை பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்."

சாத்தூர்: அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி - கோயில் பூசாரிமீது வழக்கு

"இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான நகைகளைக் கையாடல் செய்த வழக்கில் ராமர் பூசாரி அறங்காவலர்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும், கோயில் பூஜை முறை பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்."

Published:Updated:
காவல் நிலையம்

சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடியைச் சேர்ந்தவர் குருசாமி. இவரின் மகளுக்கு இந்து சமய அறநிலையத்துறையில் வேலை வாங்கிதருவதாகக் கூறி இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அறங்காவலர்குழு உறுப்பினர் ராமர் பூசாரி என்பவர் ரூ.3 லட்சம் பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், தான் சொன்னதுபோல் குருசாமியின் மகளுக்கு இதுவரை ராமர் பூசாரி வேலை வாங்கித்தரவில்லை என கூறப்படுகிறது

ராமர் பூசாரி
ராமர் பூசாரி

இதனால் சந்தேகமடைந்த குருசாமி, வேலைக்காக கொடுத்த 3 லட்ச ரூபாய் பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால் பணத்தைத் திருப்பித் தராமல் ராமர் பூசாரி ஏமாற்றிவந்ததாகச் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, அறநிலையத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தான் ஏமாற்றப்பட்டது குறித்து குருசாமி, சாத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், குருசாமியின் புகார் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி இருக்கன்குடி காவல் நிலைய போலீஸார், குருசாமியின் புகாரின்படி ராமர் பூசாரி மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் இருக்கன்குடி கோயிலுக்குச் சொந்தமான நகைகளைக் கையாடல் செய்த வழக்கில் ராமர் பூசாரி அறங்காவலர்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும், கோயில் பூஜை முறை பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கட்டங்களை கட்டாமலேயே, கட்டியதாகக் கணக்கு காண்பித்து பல லட்சங்களை மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கு இவர்மீது சி.பி.சி.ஐ.டி-யில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.