Published:Updated:

``இலவசம்'னு சொல்லி ஏமாத்திட்டாங்க..." - மருத்துவப் பரிசோதனைக்கு வந்த 287 பேர் பெயரில் கடன் மோசடி!

மோசடி

இலவச மருத்துவப் பரிசோதனைக்கு வந்தவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி 287 பேர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

``இலவசம்'னு சொல்லி ஏமாத்திட்டாங்க..." - மருத்துவப் பரிசோதனைக்கு வந்த 287 பேர் பெயரில் கடன் மோசடி!

இலவச மருத்துவப் பரிசோதனைக்கு வந்தவர்களின் ஆவணங்களைப் பயன்படுத்தி 287 பேர் பெயரில் கடன் பெற்று மோசடி செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

Published:Updated:
மோசடி

ஆதார் கார்டு மற்றும் பான்கார்டை ஏதாவது காரணங்களுக்காகக் கொடுக்கும் போது, அவற்றைச் சிலர் தவறுதலாகப் பயன்படுத்துகின்றனர். மும்பையில் அது போன்று மருத்துவப் பரிசோதனைக்கு வந்தவர்கள் கொடுத்த ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி, மருத்துவக் காப்பீடு நிறுவன நிர்வாகிகள் கடன் பெற்று மோசடி செய்துவிட்டுத் தப்பிவிட்டனர். மும்பை போரிவலியில், `மெடிரீஸ் ஹெல்த்கேர் அண்ட் ரிசேர்ச்' என்ற நிறுவனம் மருத்துவக் காப்பீடு மற்றும் மருத்துவ முகாமுக்குக் கடந்த 2018-19-ம் ஆண்டில் ஏற்பாடு செய்திருந்தது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று அந்த நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டவர்களில் 287 பேர் தங்களுக்கு மருத்துவக் காப்பீடு வேண்டும் என்று கூறி ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டை ஆவணங்களைக் கொடுத்திருக்கின்றனர்.

மோசடி
மோசடி
சித்தரிப்புப் படம்

அந்த அடையாள அட்டை ஆவணங்களைப் பயன்படுத்தி மருத்துவக் காப்பீடு வழங்க, சம்பந்தப்பட்டவர்களின் பெயரில் மருத்துவ நிறுவனம் கடன் பெற்றுள்ளது. இதற்காக மருத்துவ கம்பெனி தனியார் நிதி நிறுவனம் ஒன்றுடன் ஒப்பந்தமும் செய்துகொண்டது.

287 போலி சிம் கார்டுகள்:-

287 பேர் பெயரில் ரூ.1.55 கோடி அளவுக்குக் கடன் பெற்றுள்ளனர். கடன் கொடுத்த நிதி நிறுவனம் மாதாந்தர தவணைத் தொகை செலுத்தப்படாததால் நேரடியாகச் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களிடம் கடனை திரும்பச் செலுத்தும்படி கேட்டது. அதன் பிறகுதான் அவர்களுக்குத் தங்கள் பெயரில் மோசடியாகக் கடன் பெறப்பட்டிருப்பது தெரியவந்தது. அதையடுத்து, பொதுமக்கள் இது தொடர்பாக போலீஸில் புகார் செய்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்துவரும் போலீஸ் அதிகாரி ஒருவர் இது குறித்துக் கூறுகையில், ``ஹெல்த்கேர் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இலவச மருத்துவக் காப்பீடு வழங்குவதாகக் கூறிவிட்டு ,அவர்கள் பெயரில் மருத்துவக் காப்பீடு கடன் பெற்று மோசடி செய்திருக்கிறது. கடன் பெற்ற பிறகு ஒரு சில மாதங்கள் மட்டும் மாதாந்தர தவணைத் தொகையைச் செலுத்தியிருக்கின்றனர். அதன் பிறகு அலுவலகத்தை மூடிவிட்டு கம்பெனி உரிமையாளர்கள் தலைமறைவாகிவிட்டனர். கடன் பெறுவதற்காக 287 சிம் கார்டுகளை வாங்கி அதன் மூலம் நிதி நிறுவனத்துடன் `ஒன் டைம் பாஸ்வேர்டை' பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மோசடி
மோசடி

ஆறு பேருக்கு வலைவீச்சு!

இந்த மோசடியில் நிதி நிறுவன ஊழியர்கள் சிலருக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. நிதி நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த மொபைல் நம்பரைத் தொடர்புகொள்ள முயன்றபோது முடியவில்லை. இதையடுத்து 287 பேர் வீடுகளுக்கும் சென்று சோதனை செய்தபோதுதான், அவர்கள் யாருமே கடன் பெறவில்லை என்று தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனைக்காக ஆவணங்களை மட்டும் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளனர். தற்போது ஹெல்த்கேர் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜன் பாட்டியா, அர்விந்த் தாகூர், பவின் பாட்டியா, ராஜேஷ், நிதி நிறுவன ஊழியர்கள் நிதீஷ், தீபக் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அனைவரும் தலைமறைவாக இருக்கின்றனர். அவர்களைத் தேடிவருகிறோம். ஹெல்த் கேர் கம்பெனி உரிமையாளர்கள் கடந்த 2019-ம் ஆண்டே கம்பெனியை மூடிவிட்டனர். தொடர்ந்து விசாரித்துவருகிறோம்" என்றார்.

இது குறித்து கடன் மோசடியால் பாதிக்கப்பட்ட வசந்த் என்பவர் கூறுகையில், ``கடன் வசூலிப்பு ஏஜென்ட்டுகள் எங்கள் வீட்டுக்கு வந்து கடனைத் திரும்பச் செலுத்தும்படி சொன்னார்கள். நாங்கள் கடன் எதுவும் வாங்கவில்லை என்று சொன்னபோதுதான், இந்த மோசடி குறித்துத் தெரியவந்தது. இந்தப் பிரச்னையால் எனது சிபில் ஸ்கோர் பாதிக்கப்பட்டு வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism