Published:Updated:

`வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்' - ஆன்லைன் விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த பட்டதாரிப் பெண்

சைபர் க்ரைம் காவல் நிலையம்

இன்ஸ்டாகிராமில் `வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற விளம்பரத்தை நம்பி, ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை இழந்திருக்கிறார், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஒருவர்.

`வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்' - ஆன்லைன் விளம்பரத்தை நம்பி பணத்தை இழந்த பட்டதாரிப் பெண்

இன்ஸ்டாகிராமில் `வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற விளம்பரத்தை நம்பி, ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை இழந்திருக்கிறார், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பட்டதாரிப் பெண் ஒருவர்.

Published:Updated:
சைபர் க்ரைம் காவல் நிலையம்

ராமேஸ்வரம் சாலிமாலைத் தெருவைச் சேர்ந்தவர் சரண்யாதேவி, பிசிஏ பட்டதாரியான இவர், சரியான வேலை கிடைக்காததால் வீட்டில் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ம் தேதி தனது செல்போனில் இன்ஸ்டாகிராமில், `வீட்டிலிருந்தே ரூ.3 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை எளிதாகச்ச் சம்பாதிக்கலாம்’ என்று விளம்பரம் வந்ததைப் பார்த்திருக்கிறார்.

தற்போது வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்துவருவதால், இதன் மூலம் சம்பாதிக்கலாம் என எண்ணி, அந்த விளம்பரத்தில் இருந்த 'லிங்க்கை' க்ளிக் செய்திருக்கிறார். அது 9340341103 என்ற 'வாட்ஸ்அப்' எண்ணுக்குள் சென்றுள்ளது. அதிலிருந்து `ஏஞ்சலா’ என்ற பெயரில் `அமேசான் விற்பனையை அதிகரிக்க வீட்டிலிருந்தபடி நாங்கள் கொடுக்கும் டாஸ்க்குகளை செய்து முடித்தால் ரூ.50 ஆயிரம்வரை சம்பாதிக்கலாம்’ எனவும், `இதில் பங்கேற்க நாங்கள் கொடுத்திருக்கும் இந்த இணையதளத்துக்குச் சென்று விதிமுறைகளைப் படித்துவிட்டு, ரீசார்ஜ் தொகை செலுத்திய பின்னர் டாஸ்க்குகள் கொடுக்கப்படும்’ என இணையதள முகவரியுடன் குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

சைபர் க்ரைம்
சைபர் க்ரைம்

இதை நம்பிய சரண்யா தேவி, அவர்கள் கொடுத்த இணையதள முகவரிக்குள் நுழைந்து, அவர்கள் கூறிய விதிமுறைப்படி டாஸ்க்குகளைச் செய்வதற்காக ரீசார்ஜ் தொகை என்ற பெயரில் பலமுறை பணம் செலுத்தி டாஸ்க்குகளைச் செய்திருக்கிறார். இவர் ஒவ்வொரு டாஸ்க்காக முடிக்க முடிக்க, அந்த இணையதளத்தில் இவருக்கு பணம் ஏறுவதுபோல் காட்டியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதனால் தொடர்ந்து ரீசார்ஜ் செய்து டாஸ்க்குகளை விளையாடியிருக்கிறார். ஒரு கட்டத்தில் தன்னிடமிருந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் முழுவதையும் கட்டி விளையாடிய பின்னர், அந்த இணையதளத்தில் இவரின் கணக்கில் ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 115 ரூபாய் சேர்ந்திருக்கிறது. அந்தப் பணத்தைத் தன்னுடைய வங்கிக் கணக்குக்கு மாற்றுமாறு அந்த 'வாட்ஸ்அப்' எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியபோது, மேற்கொண்டு பணம் கட்டி தொடர்ந்து விளையாடினால் மட்டுமே பணத்தை வங்கிக் கணக்குக்கு மாற்றுவோம் எனப் பணத்தை மட்டுமே கேட்டு வாங்கிக்கொண்டிருந்ததால், அவர்கள்மீது சந்தேகமடைந்த சரண்யா தேவி, இணையதளத்தில் தேடிப் பார்த்தபோது அவர்கள் போலியானவர்கள் எனத் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து தான் ஏமாந்ததை உணர்ந்த சரண்யா தேவி, இது குறித்து ராமநாதபுரம் சைபர் க்ரைம் போலீஸில் புகாரளித்திருக்கிறார்.

சைபர் க்ரைம் காவல் நிலையம்
சைபர் க்ரைம் காவல் நிலையம்

``சரண்யா தேவி ஏமாந்த இணையதளம், செல்போன் எண்ணை ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறோம். இது போன்ற கவர்ச்சி விளம்பரங்களைப் பார்த்து ஏமாற வேண்டாம் எனத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம். ஆனால் நன்கு படித்தவர்களே இது போன்ற போலியானவர்களிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்து வருவதுதான் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சிகரமாகவும் இருக்கிறது” என சைபர் க்ரைம் போலீஸார் தெரிவித்தனர்.