Published:Updated:

`நீதான் என் இரண்டாவது மனைவி!' - மாணவிக்கு தொல்லை கொடுத்தவரைத் தூக்கிய போலீஸ் #TamilnaduCrimeDiary

சுப்பிரமணியன் #TamilnaduCrimeDiary

கடற்கரையில் வைத்து அந்த மாணவியிடம், "நான் உன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறேன், நீதான் என் மனைவி" என்று கூறியுள்ளார். #TamilnaduCrimeDiary

`நீதான் என் இரண்டாவது மனைவி!' - மாணவிக்கு தொல்லை கொடுத்தவரைத் தூக்கிய போலீஸ் #TamilnaduCrimeDiary

கடற்கரையில் வைத்து அந்த மாணவியிடம், "நான் உன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறேன், நீதான் என் மனைவி" என்று கூறியுள்ளார். #TamilnaduCrimeDiary

Published:Updated:
சுப்பிரமணியன் #TamilnaduCrimeDiary

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூர் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர், சுப்பிரமணியன். வயது 36. இவருக்கு திருமணமாகி செல்வராணி என்ற மனைவியும் 8 வயதில் பெண் குழந்தையும் உண்டு. சுப்பிரமணியன், கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். இவர், விடுமுறைக்கு அடிக்கடி சொந்த ஊருக்கு வந்துவிட்டு சிங்கப்பூர் சென்று விடுவார்.

வேதாரண்யம்
வேதாரண்யம்

இந்த நிலையில், சுப்பிரமணியனின் உறவுக்காரப் பெண் ஒருவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூரிலிருந்து ஊருக்கு வந்த சுப்பிரமணியன், அந்த மாணவி படிக்கும் கல்லூரிக்குச் சென்று, அவரை காரைக்கால் கடற்கரைக்கு அழைத்துச்சென்றிருக்கிறார். அங்கு வைத்து இருவரும் ஒன்றாக செல்ஃபி எடுத்துள்ளனர். அப்போது சுப்பிரமணியன் அந்த மாணவியிடம்,``நான் உன்னை இரண்டாவதாகத் திருமணம் செய்துகொள்கிறேன். நீதான் என் மனைவி" என்று கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பின்னர் சிங்கப்பூர் சென்ற சுப்பிரமணியன், அங்கிருந்து வாட்ஸ்அப் மூலம் தன்னை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து தொல்லைகொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், இதைப் பொறுக்க முடியாத அந்த மாணவி, இதுகுறித்து நாகை மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா மற்றும் கரியாப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் இருவரும் வழக்குப்பதிவுசெய்து, சுப்பிரமணியனைக் கைதுசெய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

சுப்ரமணியன்
சுப்ரமணியன்

அதைத் தொடர்ந்து, அந்த மாணவிக்கும் சுப்பிரமணியனுக்கும் திருமணம் செய்துவைப்பதாக உறவினர் ஒருவர் மூலம் சிங்கப்பூரில் இருக்கும் சுப்பிரமணியத்திடம் பேசவைத்தனர். இதை உண்மை என நம்பிய சுப்ரமணியன், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது, தயாராக இருந்த போலீஸார் சுப்ரமணியனைக் கைது செய்தனர். இச்செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism