Published:Updated:

அரியலூர்: கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் வீடு, கார் வாங்கலாம்! நூதன மோசடியில் ஈடுபட்டவர் கைது

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

``என்னால் பலர் வீடு, கார் வாங்கி சந்தோஷமாக வாழ்கிறார்கள். நீங்கள் அப்படி வாழ ஆசைப்பட்டால் என்னிடம் வாருங்கள்” ஆசையைத் தூண்டி பணத்தை வசூலித்தவர் கைது.

அரியலூர்: கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் வீடு, கார் வாங்கலாம்! நூதன மோசடியில் ஈடுபட்டவர் கைது

``என்னால் பலர் வீடு, கார் வாங்கி சந்தோஷமாக வாழ்கிறார்கள். நீங்கள் அப்படி வாழ ஆசைப்பட்டால் என்னிடம் வாருங்கள்” ஆசையைத் தூண்டி பணத்தை வசூலித்தவர் கைது.

Published:Updated:
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். என்னால் பலர் வீடு, கார் வாங்கி சந்தோஷமாக வாழ்கிறார்கள். நீங்கள் அப்படி வாழ ஆசைப்பட்டால் என்னிடம் வாருங்கள் என நூதனமான முறையில் ஏமாற்றியவரை அரியலூர் போலீஸார் கைது செய்திருக்கும் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர்
அரியலூர்

உடையார்பாளையத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர், அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் கூட்டம் நடத்தியுள்ளார். கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபமும், பரிசுப் பொருள்களும் கொடுப்பதாக, கூட்டத்தில் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளார். இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்த மக்கள் பலரிடம் ரூ.77,750 பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஏமாற்றி மோசடி செய்ததாக இவர் மீது தா.பழூர் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன், காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அரியலூர் மாவட்ட இணையக் குற்றக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராமலிங்கத்தைக் கைது செய்தனர். அவரிடமிருந்து செல் போன், 2 சிம் கார்டு, ஏடிஎம் கார்டு பணம், விசிட்டிங் கார்டுகள், பணம் மற்றும் கிரிப்டோ கரன்சி குறித்த நோட்டீஸ்கள் ஆகியவற்றை போலீஸார் கைப்பற்றி விசாரணை செய்தனர்.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்
அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

இதையடுத்து ராமலிங்கத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வழக்கை விசாரித்த போலீஸாரிடம் விசாரித்தோம்.

``ராமலிங்கம் ஒவ்வோர் ஊரிலும் உள்ள திருமண மண்டபங்களை வாடகைக்குப் பிடித்து அங்குள்ள மக்களை ஒரே இடத்துக்கு வர வைப்பதுண்டு, அப்படி வந்தவர்களுக்கு ஆசையைத் தூண்டும் விதமாகப் பேசுவதுண்டு. இப்படி செய்வதே இவரின் வேலையாக இருந்திருக்கிறது.

கிரிப்டோகரன்சி
கிரிப்டோகரன்சி

இவர், கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும். என்னால் பலர் வீடு, கார் வாங்கி சந்தோஷமாக வாழ்கிறார்கள். நீங்கள் அப்படி வாழ ஆசைப்பட்டால் என்னிடம் வாருங்கள் என மக்களை ஆசை வார்த்தை கூறி பலரிடம் ஏமாற்றியிருக்கிறார்.

அதே போல், மனித உரிமைக் கழகம் மாவட்டத் தலைவர், அமுதசுரபி அறக்கட்டளை நிறுவனர், நீதித்துறை எழுத்தர், மது ஒழிப்பு குழு மாவட்டத் தலைவர், வெஸ்டேஜ் நிறுவனத்தின் ஸ்டார் டைரக்டர் எனப் பல்வேறு விசிட்டிங் கார்டுகளை அடித்து வைத்துக்கொண்டு பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளதாகத் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றார்.