Published:Updated:

பாலியல், மோசடி வழக்கு: வெளிநாட்டிலிருந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்ட காசியின் நண்பர் சிக்கினார்!

கைதுசெய்யப்பட்ட காசியின் நண்பர் கெளதம்

டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் காசியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைக் காட்டி, பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்டவற்றைச் செய்துள்ளனர்.

பாலியல், மோசடி வழக்கு: வெளிநாட்டிலிருந்து ஆபாச வீடியோக்களை வெளியிட்ட காசியின் நண்பர் சிக்கினார்!

டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் காசியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைக் காட்டி, பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டிப் பணம் பறிப்பது உள்ளிட்டவற்றைச் செய்துள்ளனர்.

Published:Updated:
கைதுசெய்யப்பட்ட காசியின் நண்பர் கெளதம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த தங்கபாண்டியன் என்பவரின் மகன் காசி. இவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களைக் காதலிப்பதாகக் கூறி நேரில் சந்தித்து பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை ஆபாச வீடியோ எடுத்திருக்கிறார். கடந்த 2020-ம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த இளம்பெண் மருத்துவர் ஒருவர் காசி மீது பாலியல், பண மோசடி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காசி, கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொருளாதாரத்தில் வசதியான இளம்பெண்களுடன் நட்பாகப் பழகி, அவர்களைத் தனது காதல்வலையில் சிக்கவைக்கும் காசி, திருமணம் செய்வதாகக் கூறி வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

மேலும், ரகசிய கேமராவைத்து பெண்களுடன் அந்தரங்கமாக இருக்கும் வீடியோக்களை பதிவுசெய்துவந்திருக்கிறார். சுமார் 900 ஜிபி அளவுக்கு காசியிடம் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுவிடுவதாக மிரட்டி, பெண்களிடம் பணம் பறித்திருக்கிறார். சிறுமிகளும், திருமணம் ஆன பெண்களும் காசியின் வலையில் சிக்கியுள்ளனர்.

காசியும் அவன் கூட்டாளிகளும்
காசியும் அவன் கூட்டாளிகளும்

தமிழகம் மட்டுமல்லாமல், பெங்களூர் உள்ளிட்ட வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் காசியால் ஏமாற்றப்பட்டது தெரியவந்ததை அடுத்து, இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. காசி வீடியோக்களைப் பதிவுசெய்து வைத்திருந்த லேப்டாப் உள்ளிட்டவற்றை உடைத்து ஆதாரத்தை அழித்ததாக காசியின் தந்தை தங்கபாண்டியன் கைதுசெய்யப்பட்டிருந்தார். இப்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

காசி ரகசியமாக எடுக்கும் வீடியோக்களை அவரின் நண்பர்களான டேசன் ஜினோ, தினேஷ், கெளதம் ஆகியோருக்கு அனுப்பியிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மூன்று நண்பர்களில் கெளதம் மட்டும் குவைத்தில் வேலை செய்துவந்தார்.

கைதுசெய்யப்பட்ட காசியின் நண்பர் கெளதம்
கைதுசெய்யப்பட்ட காசியின் நண்பர் கெளதம்

டேசன் ஜினோ, தினேஷ் ஆகியோர் காசியுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களைக் காட்டி பாதிக்கப்பட்ட பெண்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்டவற்றைச் செய்துள்ளனர். அவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கெளதம் வெளிநாட்டிலேயே இருந்ததால் அவரை போலீஸாரால் கைதுசெய்ய முடியாத நிலை இருந்துவந்தது.

மேலும், காசியின் அறிவுறுத்தலின்படி பெண்களின் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருக்கிறார் கெளதம். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார் அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இந்த நிலையில்தான், குவைத் நாட்டிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு கெளதம் வருவதாக சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குச் சென்ற சி.பி.சி.ஐ.டி போலீஸார் அவரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனால் நாகர்கோவில் காசி வழக்கு மீண்டும் சூடுபிடித்திருக்கிறது.