Published:Updated:

மும்பை: புகைபிடிப்பதில் கூட்டு; ரூ.35 லட்சம் கேட்டு 13 வயது மாணவன் கடத்திக் கொலை!

கொலை

மும்பையில் ரூ.35 லட்சம் கேட்டு 13 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மும்பை: புகைபிடிப்பதில் கூட்டு; ரூ.35 லட்சம் கேட்டு 13 வயது மாணவன் கடத்திக் கொலை!

மும்பையில் ரூ.35 லட்சம் கேட்டு 13 வயது சிறுவனை கடத்திக் கொலை செய்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Published:Updated:
கொலை

மும்பை அருகிலுள்ள மீராரோட்டில் வசித்தவர் மாயக் (13). 8-வது படிக்கும் மாயக், அடிக்கடி தனது வீட்டுக்கு அருகிலுள்ள மைதானத்திற்கு செல்வது வழக்கம். அங்கு மாயக்குக்கு அன்சாரி, இம்ரான் ஷேக் ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூவரும் சேர்ந்து மைதானத்தில் அமர்ந்து புகைபிடிப்பது வழக்கம். புகைபிடிப்பதில்தான் அவர்கள் மூவரும் நண்பர்களானார்கள் எனக் கூறப்படுகிறது. மாயக்கின் தாயார் ஹீனா (27) பீர் பார் ஒன்றில் நடனப் பெண்ணாகப் பணியாற்றிவருகிறார்.

சம்பவத்தன்று மாயக் புகைபிடிப்பது குறித்து அவனுடைய தாயாரிடம் உறவினர் ஒருவர் புகார் தெரிவித்திருக்கிறார். இது குறித்து மாயக்கிடம் அவனின் தாயார் கேட்டுக் கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் தன்னுடைய தாயாருடன் சண்டை போட்டுக்கொண்டு தான் வழக்கமாகச் செல்லும் மைதானத்துக்குச் சென்றார். அங்கு அவரின் இரண்டு நண்பர்கள் ஏற்கெனவே இருந்தனர்.

மும்பை: புகைபிடிப்பதில் கூட்டு; ரூ.35 லட்சம் கேட்டு 13 வயது மாணவன் கடத்திக் கொலை!

அவர்கள் மாயக்கிடம் புகைபிடிக்கலாம் என்று கூறி பைக்கில் மாயக்கை அழைத்துச் சென்றனர். தொடர்ந்து மாயக்கைக் கடத்தி, அவனுடைய தாயாரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டனர். ஆனால் மாயக்கை எங்கு மறைத்துவைப்பது என்று தெரியாமல் பாலத்தில் செல்லும்போது மேலிருந்து கீழே தள்ளிவிட்டனர். கீழே விழுந்த மாயக் காயத்துடன் உதவி கேட்டுக் கத்தினார். இதனால் இருவரும் கீழே வந்து மாயக்கைக் கத்தியால் குத்திக் கொலைசெய்து உடலை அங்கேயே பாலத்துக்குக் கீழே போட்டுவிட்டுத் தப்பிச்சென்றனர்.

மாயக்கின் தாயார் டான்ஸ் பாருக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். இரவு நீண்ட நேரமாகியும் மாயக் வீடு திரும்பாததால் அவரின் மூத்த சகோதரன் அஜய், தன் தாயாருக்கு போன் செய்து மாயக் வீடு திரும்பாதது குறித்துத் தெரிவித்தார். உடனே ஹீனா விரைந்து வந்து மகனைத் தேடிப் பார்த்தார். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. மறுநாள் இது குறித்து ஹீனா தன் மகனைக் காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்தார். இந்நிலையில் மாயக்கின் மொபைல் நம்பரிலிருந்து மாயக்கின் தாயாருக்கு ஓர் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மாயக்கைக் கடத்தியிருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமானால் ரூ.35 லட்சம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இது பற்றி ஹீனா போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் மொபைல் போன் சிக்னலை வைத்து குற்றவாளிகள் இம்ரான், அன்சாரியைக் கைதுசெய்தனர். அவர்களிடம் விசாரித்து மாயக்கின் உடலை மீட்டனர். அவர்களிடம் விசாரித்தபோது மாயக்கின் தாயார் சமீபத்தில் புதிய வீடு வாங்கியிருப்பதால் அவரிடம் அதிக பணம் இருக்கும் என்று கருதி கடத்தியதாக இருவரும் தெரிவித்தார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!