Published:Updated:

ஆந்திராவிலிருந்து வந்த கார்; 3 நம்பர் பிளேட்டுகள் - ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது எப்படி?

கார்

பறிமுதல் செய்யப்பட்ட காரில் 3 நம்பர் பிளேட்டுகள் இருந்தன. ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட்டும், ஆந்திரா-தமிழக எல்லையில் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும், வேறு ஒரு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும் இருந்தது.

ஆந்திராவிலிருந்து வந்த கார்; 3 நம்பர் பிளேட்டுகள் - ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது எப்படி?

பறிமுதல் செய்யப்பட்ட காரில் 3 நம்பர் பிளேட்டுகள் இருந்தன. ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட்டும், ஆந்திரா-தமிழக எல்லையில் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும், வேறு ஒரு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும் இருந்தது.

Published:Updated:
கார்

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சமீபகாலமாக, கஞ்சா, அபின், குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் புழக்கம் அதிகரித்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகிறார்கள். இதனால், இப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இவர்களின் வாழ்க்கை சீரழிவதோடு, சமூக விரோத, குற்ற நடவடிக்கைகளும் பெருகி வருவதாக ஆதங்கப்படுகிறார்கள்.

ஆந்திராவிலிருந்து வந்த கார்; 3 நம்பர் பிளேட்டுகள் - ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது எப்படி?

போதைப்பொருள்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த, காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தும் பரவலான கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில்தான் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்கவும், வெளிமாநிலங்களில் இருந்து போதை பொருள்களை கடத்தி வரும் கும்பலை பிடிக்கவும் தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் கயல்விழி உத்தரவின் பேரில் நான்கு மாவட்டங்களிலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த தனிப்படையினர், தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் வழியாக தஞ்சைக்கு காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. அதனை தொடர்ந்து, தனிப்படையினர் தங்களது காண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினர், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கடற்கரை சாலையில் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியாக கார் ஒன்று மிகவும் வேகமாக வந்திருக்கிறது. இதனால் சந்தேகமடைந்த தனிப்படை காவல்துறையினர், அந்த காரை வழிமறித்து சோதனை செய்திருக்கிறார்கள்.

காருக்குள் ஏராளமான மூட்டைகள் இருந்திருக்கின்றன. அதனை பிரித்து பார்த்தபோது, அதில் கஞ்சா இருந்திருக்கிறது. மொத்தம் 150 கிலோ கஞ்சா இருந்ததாகவும், இதன் விலைமதிப்பு ஒரு கோடி ரூபாய் என காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள். கஞ்சா மூட்டைகள், கடத்தி வர பயன்படுத்திய காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள். காரை ஓட்டி வந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, இவர் திண்டுக்கல் மாவட்டம் கனவாய்பட்டியை சேர்ந்த மகேஸ்வரன் என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா முட்டைகள் கொண்டு வரப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

ஆந்திராவிலிருந்து வந்த கார்; 3 நம்பர் பிளேட்டுகள் - ரூ. 1 கோடி மதிப்பிலான கஞ்சா சிக்கியது எப்படி?

இதுகுறித்து பேசிய திருவாரூர் மாவட்ட காவல்துறையினர், ``ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து காரில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக, ரகசிய தகவல் கிடைத்தது. சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர் கணபதி உள்ளிட்டவர்களின் ஒத்துழைப்போடு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, அந்த காரை மடக்கி பிடித்தோம். அதில் கஞ்சா மூட்டைகள் மட்டுமல்லாமல், காரில் மூன்று நம்பர் பிளேட்டுகள் இருந்தன. ஆந்திர மாநில பதிவெண் கொண்ட ஒரு நம்பர் பிளேட்டும், ஆந்திரா-தமிழக எல்லையில் பிரபல வாடகை கார் நிறுவனத்தின் பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும், இவைகள் தவிர மேலும் ஒரு பதிவெண் கொண்ட நம்பர் பிளேட்டும் இருந்தது.

ஆந்திர மாநிலத்துக்குள் செல்லும் போது அந்த மாநில பதிவு எண்ணையும், தமிழகத்துக்குள் வரும் போது தமிழக பதிவு எண்ணையும், கஞ்சா கடத்தல் கும்பல் பயன்படுத்தி வந்துள்ளது. தற்போது காரை ஓட்டி வந்த மகேஷ்வரன் என்ற ஒரு நபர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? வேறு எங்கெல்லாம் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டுள்ளது ? இந்த கஞ்சா மூட்டைகள் எங்கு, யாருக்கு கொண்டு செல்லப்பட இருந்தது என்பதும் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது’’ என தெரிவித்தார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism