Published:Updated:

வலுக்கும் ஆவின் ஊழல் விவகாரம்... இந்த லாப - நஷ்டக் `கணக்கு' புரியுதா?

ஆவின் ஊழல்
ஆவின் ஊழல்

700 கோடி ரூபாய் மதிப்புக்குக் குறைவாக விற்பனை இருந்தபோது 139.34 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிறுவனம், எப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக விற்பனை நடந்தும் நஷ்டமடைந்தது?

ஆவின் நிறுவனம் கொடுத்த புள்ளிவிவரங்களின்படி...

சுனில் பாலிவால் நிர்வாக இயக்குநராக இருந்த 2016–2017 நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை – 5,281 கோடி ரூபாய்.

அந்த நிதியாண்டின் நிகர லாபம் – 139.34 கோடி ரூபாய்.

காமராஜ் நிர்வாக இயக்குநராகப் பொறுப்பேற்ற பிறகு, 2017–2018 நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை– 5,478 கோடி ரூபாய்.

அந்த நிதியாண்டில் ஆவின் அடைந்த நஷ்டம் – 27.96 கோடி ரூபாய்

2018–2019 நிதியாண்டில் ஆவின் பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனை – 5,994 கோடி ரூபாய்.

அந்த நிதியாண்டில் ஆவின் அடைந்த நஷ்டம் – 13.36 கோடி ரூபாய்.

வைத்தியநாதன் - ராஜேந்திர பாலாஜி
வைத்தியநாதன் - ராஜேந்திர பாலாஜி

''700 கோடி ரூபாய் மதிப்புக்குக் குறைவாக விற்பனை இருந்தபோது 139.34 கோடி ரூபாய் லாபம் ஈட்டிய நிறுவனம், எப்படி அடுத்தடுத்த ஆண்டுகளில் அதிக விற்பனை நடந்தும் நஷ்டமடைந்தது?'' என்று கேள்வி எழுப்பும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுச்சாமி, ''இதைவைத்தே 300 கோடி ரூபாய் வரை நஷ்டத்துக்குக் காரணமான ஊழலைக் கண்டுபிடிக்க, சி.பி.ஐ விசாரணை வேண்டும்'' என்று கோரியுள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கின் கயிறு கழுத்தை நெரித்துக்கொண்டிருந்தாலும், 'ரஜினி மல... அஜித் தல' என்று வசனங்களை அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறார் தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. ஆனால், அவருடைய பால்வளத் துறைதான் கெட்டுப்போன ஆவின் பாலைப்போல் நாறிக்கொண்டிருக்கிறது. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/3bPrJgR

பால் உற்பத்தியில் குஜராத்தின் அமுல் முதல் இடத்திலும், கர்நாடக அரசின் நந்தினி இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. தமிழகத்தின் ஆவின், போட்டிப் பட்டியலிலேயே இல்லை. கடந்த நிதியாண்டில் (2018-2019) அமுல் நிறுவனம் 45,000 கோடி ரூபாய்க்கு பால் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்திருக்கிறது. நந்தினி நிறுவனம், 15,500 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருக்கிறது. ஆனால், ஆவின் நிறுவனம் 5,994 கோடி ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்திருக்கிறது.

வலுக்கும் ஆவின் ஊழல் விவகாரம்...  இந்த லாப - நஷ்டக் `கணக்கு' புரியுதா?

தனியார் பாலைவிட ஆவின் பால் தரமாக இருந்தாலும், அது நுகர்வோரைச் சென்றடைவதில் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. 'அதிக வருவாய் ஈட்ட வேண்டிய ஆவின் நிறுவனம், நஷ்டத்தில் இயங்குவதற்கு இவர்தான் காரணம்' என்று பலரும் ஆளுங்கட்சியில் செல்வாக்காக இருக்கும் ஒப்பந்ததாரர் வைத்தியநாதனை சுட்டிக் காட்டுகிறார்கள். ஏற்கெனவே, பால் கலப்பட வழக்கில் கைது செய்யப்பட்டவர்தான் இந்த வைத்தியநாதன். அந்த வழக்கில் போதுமான ஆதாரங்களைத் தாக்கல் செய்யவில்லை என்று காவல்துறைக்குக் கண்டனம் தெரிவித்து, வைத்தியநாதன் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது சென்னை உயர் நீதிமன்றம். தற்போது இந்த வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறது.

அப்போது வைத்தியநாதனுடன் தொடர்பில் இருந்த காரணத்துக்காக அப்போதைய பால்வளத் துறை அமைச்சர் காமராஜ் துறை மாற்றம் செய்யப்பட்டார். வைத்தியநாதனின் கட்சிப் பதவியையும் ஜெயலலிதா பறித்தார். ''அம்மா ஆட்சி என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி ஆட்சியில், ஆவினில் இப்போதும் வைத்தியநாதனின் ராஜ்ஜியம்தான் நடக்கிறது'' என்கிறார்கள் துறை அதிகாரிகள்.

- இதுகுறித்து நம்மிடம் பேசிய ஒப்பந்ததாரர்கள் கூறிய பகீர் தகவல்கள், வைத்தியநாதனின் பின்னணியும், நம்மிடம் அவர் அளித்த விளக்கமும், ஆவினில் புதிய பதவியை உருவாக்கி, அதில் பிரபாத் என்பவரை அமைச்சர் நியமித்ததன் பின்னணி, அந்தச் சிறப்பு அதிகாரி பகிர்ந்த விஷயங்கள் என 360 டிகிரி கோணத்தில் அலசும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > பொங்கிவழியும் ஆவின் ஊழல்! - கலக்கும் வைத்தி... கப்சிப் பாலாஜி https://www.vikatan.com/government-and-politics/corruption/aavin-scam-jv-feb23

சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு