Published:Updated:

அதிகரிக்கும் பெட்ரோல் விலை: மும்பையில் சிஎன்ஜி ஆட்டோக்களைத் திருடி கர்நாடாகாவில் விற்ற கும்பல்

ஆட்டோக்கள்

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருவதால் மும்பையில் சி.என்.ஜி ஆட்டோக்களைத் திருடி கர்நாடகாவில் விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது.

அதிகரிக்கும் பெட்ரோல் விலை: மும்பையில் சிஎன்ஜி ஆட்டோக்களைத் திருடி கர்நாடாகாவில் விற்ற கும்பல்

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துவருவதால் மும்பையில் சி.என்.ஜி ஆட்டோக்களைத் திருடி கர்நாடகாவில் விற்பனை செய்த கும்பல் பிடிபட்டுள்ளது.

Published:Updated:
ஆட்டோக்கள்

நாட்டில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்துவருகிறது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. பெட்ரோல் விலை அதிகரித்துவருவதால் சி.என்.ஜி-யில் இயங்கும் ஆட்டோக்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. மும்பையில் பெரும்பாலான ஆட்டோக்கள் சி.என்.ஜி-யில்தான் இயக்கப்படுகின்றன. சமீபகாலமாக மும்பையில் சி.என்.ஜி-யில் இயக்கப்படும் ஆட்டோக்கள் அடிக்கடி காணாமல்போயின. இது குறித்து போலீஸாருக்கு ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில் மும்பையில் திருடப்படும் ஆட்டோக்கள் அதிக அளவில் கர்நாடகாவுக்குக் கடத்தப்படுவது தெரியவந்தது.

மொகமத்
மொகமத்

சி.என்.ஜி ஆட்டோக்களை இயக்குவதால் செலவு குறைவு என்பதால் மும்பையில் தனியாக நிறுத்தப்பட்டிருக்கும் ஆட்டோக்களை திருடிச் சென்று கர்நாடகாவில் ஒரு கும்பல் விற்பனை செய்துவந்தது. இது குறித்து மும்பை மால்வானி போலீஸ் நிலைய மூத்த அதிகாரி கூறுகையில், ``மும்பையில் ஆட்டோ டிரைவர்கள் இரவு நேரங்களில் தங்களது ஆட்டோவை ரயில் நிலையத்துக்கு அருகில் விட்டுச்செல்வது வழக்கம். இது போன்று விட்டுச் செல்லப்படும் ஆட்டோக்களை திருடர்கள் தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் கண்காணித்து அவற்றைத் திருடுவர். பின்னர் டிரைவர் ஒருவருக்குப் பணம் கொடுத்து கர்நாடகா எல்லையில் இருக்கும் அக்கல்கோட் என்ற இடத்துக்கு ஆட்டோவை ஓட்டிவரும்படி கேட்டுக்கொள்வர். அங்கிருந்து கர்நாடகாவின் குல்பர்காவுக்கு இரண்டு மணி நேரத்தில் ஆட்டோவைக் கொண்டுசெல்ல முடியும். ஆட்டோக்களைத் திருடும் கும்பல் குல்பர்காவில் ஆட்டோ நம்பர் பிளேட்டை மட்டும் மாற்றி விற்பனை செய்துவிடுகின்றனர்” என்று தெரிவித்தார்.

ஆட்டோக்கள் கர்நாடகாவுக்கு கடத்தப்படுவது குறித்து தெரிந்தவுடன் சப் இன்ஸ்பெக்டர் ஹசன் முலானி தலைமையில் தனிப்படை போலீஸார் குல்பர்காவுக்கு விரைந்தனர். அவர்கள் ஆட்டோ திருட்டில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் மொகமத் ஆசிப் ஹனிப் மற்றும் லட்சுமி காந்த் ஆகிய இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்தத் திருட்டில் தொடர்புடைய பலர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களைத் தேடிவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து திருடப்பட்ட எட்டு ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதன் மூலம் 14 வழக்குகளில் துப்பு துலங்கியிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism