Published:Updated:

`இன்னும் கொஞ்சம் வெங்காயம் கொடு!' -கேரள ஹோட்டலை அடித்து நொறுக்கிய போதைக் கும்பல்

கும்பல்
கும்பல்

வெங்காயத்தால் ஒரு ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வெங்காய விலை ஏற்றம்தான் தேர்தலை மிஞ்சிய டாபிக்காக இருக்கிறது. எப்போதாவது விலை எகிறும் வெங்காயம், இந்த ஆண்டு இரண்டுமுறை உச்சம் தொட்டு, தேசத்தையே கலங்க வைத்துவிட்டது. மத்திய, மாநில அரசுகள் மத்தியிலும் வெங்காய விலை ஏற்றம் கலக்கத்தை ஏற்படுத்தத் தவறவில்லை. உச்சபட்சமாக ஏற்றுமதிக்குத் தடை விதித்து வெங்காய விலை ஏற்றத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே, வெங்காயத்தால் ஒரு ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சூறையாடப்பட்ட ஹோட்டல்
சூறையாடப்பட்ட ஹோட்டல்

கேரளா தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ளது வாஞ்சியூர். இங்குள்ள வெட்டுக்காட்டில் `ஹோம்லி மீல்ஸ்' என்ற ஹோட்டலில் நேற்று முன்தினம் இரவு மது அருந்திய கும்பல் ஒன்று சாப்பிட வந்துள்ளது. சாப்பாடு ஆர்டர் செய்த அவர்களுக்கு ஹோட்டல் ஊழியர்கள் உணவுகளைப் பரிமாறியுள்ளனர். அப்போது உணவுடன் சேர்த்து சிறிது வெங்காயத்தையும் பரிமாறியுள்ளனர்.

அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில், `இன்னும் கொஞ்சம் வெங்காயம் வேண்டும்' என ஹோட்டல் ஊழியர்களிடம் கேட்டுள்ளது அந்தக் கும்பல். `வெங்காய விலை ஏறிவிட்டது. அதனால் அவ்வளவுதான். அதிகம் தர முடியாது" எனக் கூறிக்கொண்டே சிறிது மட்டும் வெங்காயம் வைத்துள்ளனர் ஊழியர்கள்.

`எகிப்து வெங்காயம் மக்களுக்குப் பிடிக்கல!' - காரணம் கூறும் வியாபாரிகள்

இதனால், கடுப்பான அந்தக் கும்பல் ஹோட்டல் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியுள்ளனர். கையில் கிடைத்தவற்றை வைத்து ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளது அந்தக் கும்பல். ஒரு ஊழியரை ஆப்பச்சட்டியை வைத்து தாக்கியதில் அவருக்கு மண்டை உடைந்துவிட்டது. ஊழியர்களைத் தாக்கியது மட்டுமல்லாமல் ஹோட்டலையும் அடித்து நொறுக்கியுள்ளனர். பின்னர் அங்கிருந்து அந்தக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

கும்பல்
கும்பல்

அந்தக் கும்பலில் இருந்தவர்கள் அனைவரும் இளைஞர்கள். மது குடித்துவிட்டு வந்து சண்டையிட்டுள்ளனர். தாக்குதல் தொடர்பாக போலீஸ் நிலையத்தில் ஊழியர்கள் புகார் கொடுக்க அதன்பேரில் விசாரணை நடைபெற்றுவருகிறது.

தற்போது ஊழியர்களை அந்தக் கும்பல் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் காயமடைந்த ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

நோட்டமிடும் 33 குழுக்கள்; சிக்கினால் 7 ஆண்டுகள் சிறைதான்!- எஸ்.பி-யின் வெங்காயம் பதுக்கல் எச்சரிக்கை
அடுத்த கட்டுரைக்கு