Published:Updated:

பாலிவுட் பிரபலங்கள், பார்ட்டிகளுக்கு சப்ளை... மும்பைக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் சிக்கியது!

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்

பாலிவுட் பிரபலங்கள், பார்ட்டிகளில் சப்ளை செய்வதற்காக மத்தியப் பிரதேசத்திலிருந்து போதைப்பொருள் கடத்திய கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

பாலிவுட் பிரபலங்கள், பார்ட்டிகளுக்கு சப்ளை... மும்பைக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் சிக்கியது!

பாலிவுட் பிரபலங்கள், பார்ட்டிகளில் சப்ளை செய்வதற்காக மத்தியப் பிரதேசத்திலிருந்து போதைப்பொருள் கடத்திய கும்பல் கைதுசெய்யப்பட்டிருக்கிறது.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்

மும்பையில் போதைப்பொருள் நடமாட்டம் மிகவும் தாராளமாக இருக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளிலிருந்து மும்பைக்கு போதைப்பொருள் கடத்தி, கொண்டுவரப்படுகிறது. மத்தியப் பிரதேச மாநிலம், போபால் ரயில் நிலையத்தை நோக்கி ஆட்டோவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக போபால் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. உடனே ஆட்டோ ஒன்றை இடைமறித்து போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ஆட்டோவில் இருந்த ஜுலேகா என்ற பெண்ணின் கைப்பையில் மூன்று பாக்கெட்களில் மூன்று கிலோ எடையுள்ள சரஸ் என்ற போதைப்பொருள் இருந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்

ஆட்டோவில் சாஹித் என்பவரும் இருந்தார். அவர்களிடம் விசாரித்ததில் இருவரும் மும்பை அந்தேரியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்ததில், பப்லு என்ற சாஹித் மற்றும் வீர்பஹதூர் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதில் வீர் பஹதூரிடமிருந்து 6.7 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மொத்த மதிப்பு ரூ.5 கோடி. இந்த போதைப்பொருள் ஆப்கானிஸ்தானிலிருந்து நேபாளம் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டதாக துணை போலீஸ் கமிஷனர் அமித் குமார் தெரிவித்தார். இந்த போதைப்பொருளை மும்பைக்கு ரயிலில் எடுத்துச் செல்ல கொண்டு சென்றபோது பிடிபட்டதாகத் தெரிவித்த அவர், அவை மும்பை பாலிவுட் பிரபலங்கள் மற்றும் பார்ட்டிகளில் சப்ளை செய்வதற்காகக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அந்தக் கும்பலின் தலைவி ஜுலேகா உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நேபாளம் நாட்டைச் சேர்ந்த வீர் பஹதூர் என்பவர்தான் தனது நாட்டிலிருந்து போதைப்பொருளை கடத்திக் கொண்டுவந்து கொடுத்திருப்பதாக துணை போலீஸ் கமிஷனர் அமித் குமார் தெரிவித்தார். போபாலில் இந்த போதைப்பொருள் ஒரு கிராம் 1,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும், மும்பையில் 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். சமீபத்தில்தான் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மேலும் ரூ.350 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. முந்த்ரா துறைமுகத்துக்கு அடிக்கடி கன்டெய்னரில் போதைப்பொருள் கடத்திவரப்படுவது குறிப்பிடத்தக்கது.