Published:Updated:

ஊரடங்கில் வனத்துக்குள் சென்று வேலம் மரப்பட்டையை எடுக்கும் `திடீர்’ கும்பல்! -தேனியில் அதிர்ச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பட்டை உரிக்கப்பட்ட வேல மரம்
பட்டை உரிக்கப்பட்ட வேல மரம்

வனப்பகுதியில் நுழையும் கும்பல் ஒன்று, சாராயம் காய்ச்சத் தேவையான வேலம் மரம் பட்டைகளை எடுத்துச்செல்வதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால், மாற்று போதை தேடி அலையும் குடிமகன்களில் பெரும்பாலானோர், வீட்டிலேயே கள்ளச்சாராயம் காய்ச்ச ஆரம்பித்துவிட்டார்கள். அதில், சிலர் போலீஸாரிடம் வசமாக சிக்கியும்விடுகிறார்கள். என்னதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் கட்டுப்படுத்த போலீஸ் தரப்பில் தனிப்படைகள் அமைத்திருந்தாலும், சில கும்பல்கள், தொடர்ச்சியாக கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்துகொண்டுதான் இருக்கின்றன. அதை நிரூபிக்கும் விதமாக, இரண்டு நாள்களுக்கு ஒருமுறை தேனியில், கள்ளச்சாராயக் கைதும் நடந்துவருகிறது.

கள்ளச் சாராயம்
கள்ளச் சாராயம்

இதெல்லாம் ஒருபுறம் என்றால், தேனி அருகே உள்ள மலைப்பகுதியில், சாராயம் காய்ச்ச பயன்படும் மூலப்பொருளான வேலமரப் பட்டைகளை எடுக்கும் பணியில் ஒரு கும்பல் தீவிரமாக ஈடுபடுவதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரையைத் தொடர்ந்து தேனி வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவும் ஒத்திவைப்பு!

இதுதொடர்பாக நம்மிடையே பேசிய விவசாயி ஒருவர், ``மரிக்குண்டு பஞ்சாயத்திற்கும், அம்மச்சியாபுரம் பஞ்சாயத்திற்கும் இடையே கோட்டலூத்துக் குன்று, கோழிமுட்டைக் கரடு என்ற மலைப்பகுதி உள்ளது. இதன் அடிவாரப்பகுதியில், பள்ளப்பட்டி, சங்ககோனாம்பட்டி கிராம விவசாயிகள் விவசாயம் செய்துவருகிறார்கள். கடந்த 10 நாள்களாக மலைப்பகுதியில் ஆள்கள் நடமாட்டம் இருந்துவந்தது. சிலரைப் பிடித்து நாங்கள் விசாரித்ததில், மலைக்குள் இருக்கும் வேலம் மர பட்டையை சாராயத்திற்காக எடுக்க வந்ததாகத் தெரிவித்தனர். இது, எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பட்டை உரிக்கப்பட்ட வேலம் மரம்
பட்டை உரிக்கப்பட்ட வேலம் மரம்

மரப்பட்டைகளை சாக்கில் கட்டிக்கொண்டு சென்றால் சோதனைச் சாவடிகளில் போலீஸாரிடம் சிக்கிவிடுவார்கள் என்பதால், பட்டைகளைச் சிறிய துண்டுகளாக வெட்டி, தண்ணீர் எடுக்க வருவது போல, பிளாஸ்டிக் குடங்களில் போட்டுக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். கிட்டத்தட்ட மலையின் பெரும்பாலான பகுதியில் உள்ள வேலம் மரப் பட்டைகளை உரித்து எடுத்துவிட்டனர். அமைதியான பகுதி இது. இப்போது சாராயக் கும்பல் நடமாட்டம் இருக்கிறது. வனத்துறைதான் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`மருத்துவமனையில் இருந்த ஐவரும் வீடு திரும்பினர்!’ - ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறிய தேனி

இந்த வனப்பகுதி கண்டமனூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்பதாலும், மேகமலை வன உயிரினச் சரணாலய நிர்வாக அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதி என்பதாலும், சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “அதனை வெல்வேல் மரம், வேலம் மரம் என்பார்கள். இந்த விவகாரம் தொடர்பாக இப்போது தான் என் கவனத்திற்கு தகவல் வந்தது. வனத்துறை ஊழியர்களை அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கிறேன். அவர்கள், மலைப்பகுதி முழுவதும் ஆய்வு செய்வார்கள். இது போன்று அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்து வேலம்பட்டைகளை எடுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்!” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு