Published:Updated:

புனே ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட சிறுமி! - 11 பேர் கும்பலால் நேர்ந்த கொடூரம்

சிறுமி - Representational Image
சிறுமி - Representational Image

புனே ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் உட்பட 11 பேர் கொண்ட கும்பல் 14 வயது சிறுமியை கடத்திச்சென்று சீரழித்துள்ளது. 8 பேர் மட்டும் இது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புனேயை சேர்ந்த 14 வயது சிறுமி வெளியூரில் உள்ள தனது தோழியை காணச் செல்வதற்காக ரயில் நிலையம் வந்தார். தான் செல்ல வேண்டிய ரயில் குறித்து விசாரிக்க, ரயில் நிலையத்தில் நின்ற ஆட்டோ டிரைவர் ஒருவர், குறிப்பிட்ட ரயில் அடுத்த நாள் தான் வரும் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சிறுமி தங்குவதற்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். உடனே ரயில் நிலையத்தில் இருந்து சிறுமியை ஆட்டோ டிரைவர் தனது ஆட்டோவில் அழைத்து சென்றார். ஆட்டோவில் செல்லும் போதே ஆட்டோ டிரைவர் தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து வரவழைத்து சிறுமியை பல இடங்களில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதனிடையே சிறுமியின் பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என்று கூறி போலீஸில் புகார் செய்திருந்தனர்.

சிறார் வதை
சிறார் வதை

போலீஸார் ஒரு புறம் சிறுமியின் புகைப்படத்துடன் தேடிக்கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிறுமி காணாமல் போன 5 நாட்கள் கழித்து போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டார். அவரை போலீஸார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகின்றனர். சிறுமி மிகவும் அதிர்ச்சியில் இருப்பதால் அவரை தீவிரமாக கண்காணித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமி கொடுத்த அடையாளம், கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் போலீஸார் இரண்டு ரயில்வே ஊழியர்கள் உட்பட 8 பேரை கைது செய்தனர். மேலும் எஞ்சியவர்கள் யார் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு ரயில்வே ஊழியர்களும் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வேலூர் சிறுமி! - போக்சோவில் கைதான இளைஞருக்கு ஆயுள் தண்டனை
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு