Published:Updated:

இன்னோவா காரில் சென்று ஆடுகளைக் கடத்திய கும்பல்; போலீஸிடம் சிக்கியது எப்படி?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள்
பறிமுதல் செய்யப்பட்ட ஆடுகள்

தூத்துக்குடியில் கார்களில் சென்று ரூ.10 லட்சம் மதிப்புள்ள 101 ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 14 ஆடுகள் மற்றும் திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள 3 கார்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சூரங்குடி, குளத்தூர், எப்போதும்வென்றான், மாசார்பட்டி, சாயர்புரம், குரும்பூர், கயத்தாறு, சேரகுளம், திருச்செந்தூர், புதுக்கோட்டை தட்டார்மடம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி ஆடுகள் திருடு போயின. இதுதொடர்பாக ஆடுகளின் உரிமையாளர்கள் காவல் நிலையங்களில் அளித்த புகார்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன.

கைது செய்யப்பட்ட செல்வராஜ், ஆறுமுகம்
கைது செய்யப்பட்ட செல்வராஜ், ஆறுமுகம்
எத்தனைக் காலம்தான் ஏமா(ற்)றுவார் இந்த நாட்டிலே! - மெடிக்கல் மாஃபியாக்களின் சுரண்டல்கள் - 3

இந்த நிலையில், ஆட்டுத் திருட்டைக் கண்காணித்து கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்திட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைத்தார். ஆடுகள் திருடு போன பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமராப் பதிவுகள் மூலம் தீவிர விசாரணையில் தனிப்படையினர் ஈடுபட்டுவந்தனர். இதற்கிடையில் வேம்பார் சோதனைச் சாவடிப் பகுதியில் போலீஸார், நேற்று ஒவ்வொரு வாகனமாக நிறுத்தி சோதனை செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் ஓட்டி வந்த இன்னோவா காருக்குள் வாயில் டேப்பால் ஒட்டப்பட்ட நிலையில் ஆடுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீஸார் சாத்தையன் மற்றும் அதே காரில் வந்த காரைக்குடியைச் ஆறுமுகம் ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆடுகளைக் கடத்தி கார்களில் கொண்டு சென்றது தெரியவந்தது.

ஆடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள்
ஆடு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார்கள்

இதையடுத்து இருவரையும் கைது செய்த அவர்களிடமிருந்த 14 ஆடுகள் மற்றும் ஆடு திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரூ.50 லட்ச ரூபாய்ம் மதிப்புள்ள 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். போலீஸாரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்த திருடர்கள், ``தூத்துக்குடி மாவட்டத்துல பல பகுதிகள்ல ஆடு வளர்ப்பு அதிகமா நடக்குது. வீட்டுக்கு வீடு ஆடு வளர்ப்பாங்க. பகல் நேரத்துல ரெண்டு மூணு நாள் முதல்ல ரவுண்ட் அடிப்போம். அந்த ஊருல ஆடுகள் எங்க அதிகமா இருக்கு. இதுல நாய்த் தொல்லை, ஆள் நடமாட்டம் அதிகமில்லாத ஏரியாக்கள் எதுன்னு பார்த்து வச்சுக்குவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராத்தியியில் 2 மணிக்கு மேல அந்த ஏரியாவுக்குப் போயி ஆடுகளைத் தூக்கிடுவோம். ஆடுகள் கத்திடாம இருக்க வாயில டேப்பைச் சுத்தி ஒட்டிருவோம். பத்து பதினைஞ்சு ஆடுகள் சேர்ந்ததும் எங்க ஊரு காரைக்குடிக்கு கார்லயே கொண்டு போயிடுவோம். திருடுற ஆடுகளை காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில இருக்குற முகம்மது அராபத், ஆசிக்கின் மட்டன் கடையில நல்ல விலைக்கு வித்துடுவோம்.

திருடப்பட்ட ஆடுகள்
திருடப்பட்ட ஆடுகள்

எங்களைப் போல பாண்டிச்செல்வம், பாலமுருகன் நவநீதகிருஷ்ணன் ராஜா ஆகிய 4 பேரும் அந்த மட்டன் கடைக்கு ஆடுகளைத் திருடிக் கொடுப்பாங்க” என்றனர். இதுகுறித்துப் பேசிய மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார், ``இந்த கும்பல்கள் சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆடுகளை திருடி வந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 11 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட 20 இடங்களில் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 101 ஆடுகளை திருடியுள்ளனர். மற்ற நபர்களில் முகம்மது அராபத், பாண்டிச்செல்வம், பாலமுருகன் ஆகிய 3 பேர் புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கு ஒன்றில் சம்மந்தப்பட்டு அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்து தற்போது சிறையில் உள்ளனர்.

ஒப்படைக்கப்பட்ட ஆடுகள்
ஒப்படைக்கப்பட்ட ஆடுகள்
நண்பனின் காதலுக்காக திருட்டு... சிசிடிவி-யால் சிக்கிய பட்டதாரிகள்! - சென்னையில் அதிர்ச்சி

தனிப்படை போலீஸார் மற்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் 2 பிரிவுகளாக பிரிந்து காரில் சென்று ஆடுகளை திருடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிப்பதிவால் இவர்களின் திருட்டு வெளிச்சத்திற்கு வந்து சிக்கியுள்ளனர்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு