Published:Updated:

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சித்து மூஸ் வாலா கொலையும் வெளிவந்த கேங் வார்களும் |மினி தொடர்-1

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப்பில் சித்து மூஸ் வாலா படுகொலைசெய்யப்பட்டது, கேங் வாரை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள் சிலர்.

பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்: சித்து மூஸ் வாலா கொலையும் வெளிவந்த கேங் வார்களும் |மினி தொடர்-1

பஞ்சாப்பில் சித்து மூஸ் வாலா படுகொலைசெய்யப்பட்டது, கேங் வாரை உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறது என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள் சிலர்.

Published:Updated:
பஞ்சாப்பைப் பதறவைக்கும் கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப் மாநிலம் எப்போதுமே ஆயுத கலாசாரத்தோடு தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது. ஒரு புறம் பாகிஸ்தான் எல்லையோடு தொடர்புகொண்டிருக்கிறது. மற்றொரு புறம் காலிஸ்தான் ஆதரவாளர்கள் மக்களின் உணர்வுகளோடு கலந்திருக்கிறார்ர்கள். இதனால் பஞ்சாப் மாநிலத்துக்கு கேங் வார் அல்லது ஆயுத கலாசாரம் என்றைக்குமே புதுமை கிடையாது. ஆனால், சமீபத்தில் நடந்த பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலா படுகொலைச் சம்பவம் பஞ்சாப் கேங் வாரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.

கேங்ஸ்டர்ஸ்
கேங்ஸ்டர்ஸ்

பஞ்சாப்பில் முக்கியக் கிரிமினல்கள் அனைவருமே கைதுசெய்யப்பட்டு டெல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் சிறையில் இருந்துகொண்டே கிரிமினல்கள் வெளியில் இருக்கும் தங்களது கூட்டாளிகளை இயக்கிக்கொண்டிருக்கின்றனர் அல்லது கனடா போன்ற வெளிநாடுகளிலிருந்து இயக்குகின்றனர். பஞ்சாப்பில் கல்லூரி, பல்கலைக்கழகங்களில்தான் இந்த கேங் வார் கலாசாரம் அதிக அளவில் தொடங்கியிருக்கிறது. இப்போது விளையாட்டிலும் இது வேரூன்றியிருக்கிறது.

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அகாலி தளம் கட்சியின் இளைஞரணிப் பிரிவைச் சேர்ந்த விக்கியை மொகாலியில் இரண்டு பேர் சுட்டுக் கொலைசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாடகர் சித்து
பாடகர் சித்து

பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவின் மேலாளர் ஒருவர், பாம்பிஹா என்னும் நபர், ஹரியானா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதற்குப் பழிவாங்கும்விதமாகவே சித்து மூஸ் வாலாவை சிறையிலிருக்கும் லாரன்ஸ் பிஸ்னோய், கனடாவில் இருக்கும் கோல்டி பிரார் என்பவரின் உதவியோடு படுகொலை செய்தார் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்தப் படுகொலையின் மூலம் கேங் வார் அடுத்த கட்டத்துக்குச் சென்றிருப்பதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். பஞ்சாப்பில் பாப் பாடகர்கள் அதிகமாக இருக்கின்றனர். அவர்களில் பலருக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் வந்துகொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் அதிகமானோர் இருக்கின்றனர். இந்த கேங் வார் அச்சம் காரணமாகத்தான் பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு 400-க்கும் அதிகமான முக்கியப் பிரமுகர்களுக்கு பஞ்சாப் அரசு பாதுகாப்பு கொடுத்திருந்தது. ஆனால் அதை ஆம் ஆத்மி கட்சியின் அரசு பதவிக்கு வந்தவுடன், விஐபி கலாசாரமே இருக்கக் கூடாது என்று கூறி பாதுகாப்பைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதைத் தொடர்ந்தே சித்து படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். சிறையில் இருக்கும் லாரன்ஸ் கூட்டாளி ஷாருக்கிடம் போலீஸார் விசாரித்தபோது, பாதுகாப்பு அதிகமாக இருந்ததால்தான் இது வரை சித்து மூஸ் வாலாவைக் கொலை செய்யாமல் இருந்தோம் என்று தெரிவித்திருக்கிறார். தேவிந்தர் பாம்பிஹா கூட்டத்துக்கும், லாரன்ஸ் கூட்டத்துக்கும் இடையிலான மோதலே மூஸ் வாலா படுகொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு கூட்டத்தினருக்கும் இடையே கடந்த 2016-ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவர் ரவி படுகொலையின் மூலம் பகைமை தொடங்கியது. அதன் பிறகு 2017-ம் ஆண்டு லெவி தியோராவும், 2020-ம் ஆண்டு குர்லால் பிரார், 2021-ம் ஆண்டில் குர்லால் பெவான், விக்கி, 2022-வது ஆண்டில் சந்தீப் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டதால் கடந்த ஐந்து ஆண்டுகளில் பஞ்சாப்பில் கேங் வார் உச்சமடைந்திருக்கிறது. பஞ்சாப் மட்டுமல்லாமல் ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, உத்தரப்பிரதேசத்துக்கு பஞ்சாப் கிரிமினல்கள் தங்களது செயல்பாடுகள் மற்றும் கூட்டத்தினரை விரிவுபடுத்தியிருக்கின்றனர். லாரன்ஸ் பிஸ்னோயிடம் மட்டும் 700-க்கும் அதிகமான அடியாட்கள் இருக்கின்றனராம். அவர்கள் வடமாநிலங்கள் அனைத்திலும் பரவியிருக்கின்றனர். தற்போது பஞ்சாப்பை மையமாக வைத்து ஆறுக்கும் மேற்பட்ட கூட்டத்தினர் செயல்பட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.

பிரப்ஜிந்தர் சிங்
பிரப்ஜிந்தர் சிங்

கேங் வாருக்கு வித்திட்டவர்?

பஞ்சாப்பில் முதன் முதலில் கேங் வாருக்கு வித்திட்டது என்று எடுத்துக்கொண்டால் பிரப்ஜிந்தர் சிங் என்று சொன்னால் மிகையாகாது. 1985-ம் ஆண்டே பஞ்சாப் பல்கலைக்கழக மாணவரணித் தலைவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார். பிரப்ஜிந்தர் சிங்கும் மாணவரணித் தலைவராக இருந்ததோடு, சிரோன்மணி அகாலி தளம் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1989-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிரோன்மணி அகாலி தளம் சிறப்பான வெற்றிபெற்றது. ஆனால் தேர்தலை சஸ்பெண்ட் செய்துவிட்டு, சிரோன்மணி அகாலி தள தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பிரப்ஜிந்தர் சிங் பஞ்சாப்பை காலிசெய்துவிட்டு உத்தரப்பிரதேசத்தில் தஞ்சம் அடைந்தார். அவர், உத்தரப்பிரதேசத்திலிருந்து எப்படி டெல்லிக்குக் கொண்டுவரப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறித்தும் பஞ்சாப்பில் செயல்படும் கிரிமினல்கள், கேங்குகள் குறித்தும் அடுத்த பாகத்தில் பார்ப்போம்!

தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism