Published:Updated:

சென்னை: நடிகர் ஆர்யா மீதான புகார் என்ன? - விவரிக்கும் பெண் டாக்டரின் வழக்கறிஞர்

ஆர்யா
ஆர்யா

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், நடிகர் ஆர்யாவிடம் சுமார் மூன்று மணி நேரம் நேற்று விசாரணை நடத்தினர். அவர்மீது என்ன புகார் கொடுக்கப்பட்டிருக்கிறது என ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் வித்ஜாவின் வழக்கறிஞர் ஆனந்தன் நம்மிடம் விரிவாக விவரித்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் வித்ஜா என்பவர், நடிகர் ஆர்யாவுடன் நெருங்கிப் பழகியதாகவும், அவரைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஆன்லைன் மூலம் பணம் பெற்றதாகவும் மத்திய குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பேரில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மத்திய குற்றப்பிரிவில் நடிகர் ஆர்யா நேற்றிரவு ஆஜராகி விளக்கமளித்தார். சுமார் மூன்று மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு வெளியில் வந்த நடிகர் ஆர்யாவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

ஆர்யா
ஆர்யா

நடிகர் ஆர்யாவிடம் விசாரணை நடத்திய போலீஸாரிடம் பேசினோம். ``ஜெர்மனியில் குடியிருக்கும் வித்ஜா என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் ஆர்யாவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. ஜெர்மனியிலிருந்து வித்ஜா அனுப்பிய பணம் குறித்து ஆர்யாவிடம் கேட்ட கேள்விக்கு அவர் விளக்கமளித்திருக்கிறார். அதேபோல இருவருக்கும் நட்பு ஏற்பட்டது எப்படி, இருவரும் சமூக வலைதளங்கள் மூலம் சாட் செய்தது தொடர்பாகவும் கேள்விகள் கேட்டோம். வித்ஜா தரப்பில் நடிகர் ஆர்யா அனுப்பிய மெசேஜ்கள், பணம் அனுப்பிய விவரங்கள் ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதன் அடிப்படையில் நடிகர் ஆர்யாவிடம் கேட்டபோது அவர் தரப்பு விளக்கத்தை அளித்தார். நடிகர் ஆர்யா அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

இது குறித்து வித்ஜாவின் வழக்கறிஞர் ஆனந்தனிடம் பேசினோம். ``நடிகர் ஆர்யா மீது புகாரளித்திருக்கும் வித்ஜா, ஜெர்மனி குடியுரிமை பெற்றவர். அவரின் பெற்றோர், இலங்கைத் தமிழர்கள். ஜெர்மனியில் வித்ஜா, முதன்மை இதயவியல் நிபுணராகப் பணியாற்றிவருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஆர்யாவின் சமூக வலைதளப் பக்கம் மூலம் அவருடன் டாக்டர் வித்ஜா பழகியிருக்கிறார். அதன் பிறகு நடிகர் ஆர்யாவும் டாக்டர் வித்ஜாவும் காதலித்திருக்கின்றனர். நடிகர் ஆர்யாவுக்குப் பணத் தேவை ஏற்பட்டபோது வித்ஜா, ஜெர்மனியிலிருந்து Western Union, Moneygram and Ria Travels ஆகியவை மூலம் 70.38 லட்சம் வரை பல கட்டங்களாக அனுப்பிவைத்திருக்கிறார். இருவரும் வாட்ஸ்அப்பில் மணிக்கணக்கில் சாட்டிங் செய்திருக்கின்றனர். அதை பிரின்ட் எடுத்தால் 130 பக்கங்கள் வரும்.

ஆர்யா, சாயிஷா
ஆர்யா, சாயிஷா

திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய நடிகர் ஆர்யா, பணத்தை வாங்கிய பிறகு டாக்டர் வித்ஜாவை ஏமாற்றிவிட்டார். அதன் பிறகே டாக்டர் வித்ஜா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குப் புகார் அனுப்பினார். அப்போது நடிகர் ஆர்யா தன்னை ஏமாற்றியதற்கான ஆதாரங்கள், பணம் அனுப்பிய ஆதாரங்கள் என அனைத்தையும் அனுப்பிய பிறகு தமிழக உள்துறைக்கு பிரதமர் அலுவலகத்திருந்து அந்தப் புகார் மனு அனுப்பிவைக்கப்பட்டது. அதன் பிறகே அந்தப் புகார் மீதான விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணை கிடப்பில் போடப்பட்டதால் வித்ஜா தரப்பில் சென்னை பட்டாபிராமைச் சேர்ந்த ராஜபாண்டியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தார். அந்த மனுவில், `நடிகர் ஆர்யா, டாக்டர் வித்ஜாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 70.4 லட்சம் ரூபாய் வாங்கி ஏமாற்றிவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2018-ம் ஆண்டு, மார்ச் மாதம் முதல் டாக்டர் வித்ஜாவும் நடிகர் ஆர்யாவும் வாட்ஸ்அப் மூலம் மெசேஜ் அனுப்பிவந்துள்ளனர். நடிகர் ஆர்யாவும், அவரின் அம்மாவும் வீடியோ காலில் பேசும்போது டாக்டர் வித்ஜாவைத் திருமணம் செய்துகொள்வதாக வாக்குறுதி அளித்திருக்கின்றனர். நடிகர் ஆர்யாவுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் கூறி வித்ஜாவிடம் பணம் கேட்டிருக்கிறார். அந்தப் பணத்தைத் திருப்பித் தந்துவிடுவதாகவும் கூறியிருக்கிறார். அதை நம்பி 2018-ம் ஆண்டில் பணத்தை அனுப்பிவைத்திருக்கிறார். ஆனால் நடிகர் ஆர்யா அவரைத் (டாக்டர் வித்ஜா) திருமணம் செய்துகொள்ளாமல், நடிகை சாய்ஷாவை 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

வழக்கறிஞர் ஆனந்தன்
வழக்கறிஞர் ஆனந்தன்
நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க சைக்கிளில் வந்த நடிகர் ஆர்யா!

பணத்தைத் திருப்பிக் கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் நடிகர் ஆர்யா, அவரின் குடும்பத்தினர் பேசுவதாகக் குறிப்பிட்டிருந்தார். நீதிமன்றம் தலையிட்ட பிறகே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடிகர் ஆர்யாவுக்கு சம்மன் அனுப்பி நேற்று விசாரணை நடத்தியிருக்கிறது. நடிகர் ஆர்யா, அவரின் அம்மா உட்பட இந்தப் புகாரில் குற்றம் சுமத்தப்பட்டிருப்பவர்கள் மீது போலீஸார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவிருக்கிறோம்’’ என்றார்.

இதுதொடர்பாக நடிகர் ஆர்யாவிடம் விளக்கம் கேட்க பல தடவை முயன்றோம். ஆனால் அவர் பதிலளிக்கவில்லை. அவரின் தரப்பு விளக்கத்தையும் பரிசீலனைக்குப் பிறகு வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

நடிகர் ஆர்யா நடித்த `சார்பட்டா பரம்பரை’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், அவர் மீதான புகாரும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு