Published:Updated:

பள்ளிக்கட்டணம் செலுத்த தாமதம்: துன்புறுத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை?! - தந்தை கண்ணீர்

துன்புறுத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளிக்கட்டணம் செலுத்த தாமதம்: துன்புறுத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை?! - தந்தை கண்ணீர்

உத்தரபிரதேச மாநிலத்தில் 8-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
துன்புறுத்தப்பட்ட 8-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் 8-ம் வகுப்பு படித்துவந்த மாணவன், பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்தவுடன் தனது அறையில், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தது. அதைத் தொடர்ந்து, மாணவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

தற்கொலை
தற்கொலை
சித்திரிப்புப் படம்

அந்தப் புகாரில், "என்னுடைய மகன் ஒரு தனியார் பள்ளியில் படித்துவந்தார். இந்த முறை பள்ளிக்கு நான் செலுத்தவேண்டிய பள்ளிக்கட்டணத்தைச் செலுத்துவதற்குச் சற்றுத் தாமதமானது. அதனால், என் மகனை வகுப்பில் துன்புறுத்தியிருக்கிறார்கள். மேலும், அவனை வகுப்பினுள் அனுமதிக்கவில்லை. அதனால், அவமானப்படுத்தப்பட்ட என் மகன் தற்கொலை செய்துகொண்டார். என் மகனின் மரணத்துக்குக் காரணமானவர்களை தண்டிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்தப் புகார் தொடர்பாக பள்ளி நிர்வாகம், "தற்கொலை செய்துகொண்ட மாணவனுக்கும் அவனுடைய வகுப்பு தோழனுக்கும் தகராறு ஏற்பட்டது. அதற்காக அவர்களின் பெற்றோரைப் பேசுவதற்காக அழைத்தோம். இறந்த மாணவரின் பெற்றோர் பள்ளிக்கு வரவில்லை. அதனால் நேற்று அவரின் தந்தையைக் கண்டிப்பாக அழைத்துவரக் கூறினோம்.

காவல்துறை
காவல்துறை

அதனால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா எனத் தெரியவில்லை" எனக் கூறியிருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவருகிறது. பள்ளி ஊழியர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை வட்டாரம் தெரிவித்திருக்கிறது.