விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பைச் சேர்ந்தவர் பூபதி. இவர் கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவினால் இறந்துவிட்டார். அதனால், தன் 18 வயது மகளுடன் பூபதி தனியே வசித்துவந்தார்.
அவருக்கும் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பழக்கத்தால் நாளடைவில் இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமலேயே கணவன், மனைவி போல வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வீட்டிலிருந்த பூபதியின் 18 வயது மகளுக்கு பாண்டிமுருகன் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தன் தாயிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார். ஆனால், இதைக்கேட்டு ஆத்திரம் அடைய வேண்டிய பூபதி, தட்டிக்கேட்பதற்குப் பதிலாக, பாண்டிமுருகனுடன் சேர்ந்துகொண்டு அவருக்கு ஆதரவாகப் பேசி சிறுமியை சமாதானம் செய்துள்ளார்.

மேலும், பாலியல் தொல்லை குறித்து வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் தன் மகளை மிரட்டியுள்ளார் பூபதி. அதை தாங்கிக்கொள்ள முடியாத அந்தச் சிறுமி, இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள், போலீஸ் உதவியுடன் சிறுமியின் தாய் மற்றும் பாண்டிமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதுதொடர்பாக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுமிக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் குறித்து, குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு அதிகாரிகளிடம் பேசினோம், ``குடும்பப் பிரச்னை காரணமாக கணவரைப் பிரிந்து மகளுடன் தனியே வசித்து வந்த பூபதிக்கு, அன்றாடச் செலவுக்கான பணத்தேவைகளை பாண்டிமுருகன் பூர்த்தி செய்துவந்துள்ளார். இதன் அடிப்படையில் தான் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. பூபதியின் கணவர் இறந்தபிறகு பாண்டிமுருகன் அவர் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்திருக்கிறார். பூபதியுடன் பழகிவந்த பாண்டிமுருகன், ஒருகட்டத்தில் பூபதியின் மகளிடமும் பாண்டிமுருகன் தவறாக நடந்திருக்கிறார்.
அதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இதுகுறித்து தன் தாயிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால், அவர் பாண்டிமுருகனை எச்சரிக்காமல் தன் மகளிடம், `இதை பத்தி யாருகிட்டயும் சொல்லக்கூடாது... சொன்னா அவ்வளவுதான்' என கடுமையாகப் பேசி அடித்து துன்புறுத்தியிருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி பாண்டிமுருகனும், பூபதியும் திருமணம் செய்துகொண்டு வீட்டுக்கு வந்திருக்கிறார்கள். இதுகுறித்து சிலர், `பாண்டிமுருகனுக்கு இதுதான் முதல் திருமணம் என்றாலும், இதற்கு முன்பு பல பெண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அதனால், உன் அம்மாவையும் ஏமாற்றி விடுவார்' என்று கூறியிருக்கின்றனர். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமி தன் தாயிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், `இதுக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாரும் பாண்டிமுருகனோட லவ்வர்ஸ். ஆனால் நான் அவரோட பொண்டாட்டி ஆகிட்டேன், அவரு என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டதால இவங்க யாரும் இப்போ பாண்டிக்கூட பேசமாட்டாங்க நீ ஃபிரியா விடு' என்று கூறியிருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதைக்கேட்டு அதிர்ந்து போன சிறுமி, வீட்டைவிட்டு வெளியேறி எங்களிடம் வந்து புகார் கொடுத்தார். அதையடுத்து, நாங்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் சிறுமி புகாரின் அடிப்படையில் அவர் தாய் மற்றும் பாண்டிமுருகனை கைது செய்தனர்.

தாய் கைதாகி விட்ட நிலையில், யாரும் துணைக்கு ஆளில்லாமல் தனியாக இருந்த சிறுமிக்கு அடைக்கலாம் கொடுக்க அவர் உறவினர்கள் முன்வந்தனர். அதனால், அவர்களிடம் சிறுமியை ஒப்படைத்துவிட்டோம்" என்றனர்.