Published:Updated:

காதலன் கண்முன்னே... கொள்ளையர்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை; போலீஸாருக்கு வெட்டு! - நடந்தது என்ன?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குற்றவாளிகள்

சாயல்குடி கடற்கரைப் பகுதியில் காதலன் கண்முன்னே காதலியைக் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளையர்களைக் கண்டறிந்து பிடிக்கச் சென்ற போலீஸாரைக் குற்றவாளிகள் வாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் கண்முன்னே... கொள்ளையர்களால் இளம்பெண் பாலியல் வன்கொடுமை; போலீஸாருக்கு வெட்டு! - நடந்தது என்ன?

சாயல்குடி கடற்கரைப் பகுதியில் காதலன் கண்முன்னே காதலியைக் பாலியல் வன்கொடுமை செய்த கொள்ளையர்களைக் கண்டறிந்து பிடிக்கச் சென்ற போலீஸாரைக் குற்றவாளிகள் வாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குற்றவாளிகள்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே மூக்கையூர் துறைமுக கடற்கரைப் பகுதிக்கு, கடந்த 21-ம் தேதி அன்று அருப்புக்கோட்டையை அடுத்துள்ள பாளையம்பட்டியைச் சேர்ந்த இளம் காதல் ஜோடி ஒன்று வந்துள்ளது. கடற்கரையில் அவர்கள் இருவர் மட்டும் தனியாக அமர்ந்திருப்பதைப் பார்த்த இரண்டு பேர் அவர்களை மிரட்டி அந்தப் பெண்ணிடம் இருந்த செயின், வளையல், மோதிரம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.

பின்னர் கடற்கரைப் பகுதியில் ஆட்கள் இல்லாததை பயன்படுத்திக்கொண்ட அவர்கள், அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தன் காதலியை மீட்கப் போராடிய காதலனை, கொள்ளையர்கள் இருவரும் சரமாரியாகத் தாக்கிவிட்டு அந்தப் பெண்ணைக் காதலன் கண்முன்னே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

எவ்வளவு சத்தம்போட்டும் கடற்கரைப் பகுதியில் ஆட்கள் இல்லாததால் உதவிக்கு யாரும் இன்றி காதலன் கதறியுள்ளார். ஆத்திரத்தில் இருந்த காதலன் அவர்கள் இருவரையும் தாக்க முயன்றபோது அவர்கள் அந்த வாலிபரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதையடுத்து, அந்தப் பெண், `எங்களை விட்டுவிடுங்கள். நாங்கள் சென்றுவிடுகிறோம். இனி இந்தப் பக்கம் வர மாட்டோம்’ என அவர்கள் காலில் விழுந்து கதறியதாகக் கூறப்படுகிறது. பின்னர் இது குறித்து வெளியில் சொன்னால் இருவரையும் கொலை செய்துவிடுவோம் என அவர்கள் மிரட்டியுள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதையடுத்து கண்ணீர் சிந்தியபடி சாயல்குடிக்கு வந்த அவர்களிடம் அங்கிருந்தவர்கள் என்ன ஆனது என விசாரித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண், காதலனிடம், தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை பற்றி வெளியே சொல்ல வேண்டாம். வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் எனக் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், பணம், நகை கொள்ளை போனது குறித்து மட்டும் தெரிவித்துள்ளனர். பின்னர் அங்கு வந்த சாயல்குடி போலீஸாரிடம் நாங்கள் இருவரும் கடற்கரையில் அமர்ந்திருந்தபோது இருவர் எங்களிடமிருந்த நகைகளைப் பறித்துச் சென்றுவிட்டதாகப் புகார் அளித்துவிட்டுச் சென்றனர்.

குற்றவாளிகள் வாளால் வெட்டியதில் காயமடைந்த போலீஸார்
குற்றவாளிகள் வாளால் வெட்டியதில் காயமடைந்த போலீஸார்

ஆனால் தன் கண்முன்னே தன்னுடைய காதலியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத காதலன், நேற்று முன்தினம் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவரிடம் அங்குள்ள புறக்காவல் நிலைய போலீஸார் விசாரித்துபோது நடந்த சம்பங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீஸார் இது குறித்து ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சாயல்குடி போலீஸாருடன் சேர்ந்து குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது காதலர்களிடம் வழிப்பறி மற்றும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது கமுதியை அடுத்துள்ள கே.வேப்பங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், அவனது நண்பன் விருதுநகர் மாவட்டம், நத்தகுளம் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் ஆகிய இருவர்தான் எனத் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களைப் பிடிப்பதற்காக ராமநாதபுரம் தீவிர குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் நவநீதன், தலைமைக் காவலர் கருப்பசாமி மற்றும் சாயல்குடி போலீஸார் வேப்பங்குளம் கிராமத்துக்குச் சென்றனர். போலீஸாரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற இருவரையும் விரட்டிப் பிடிக்க முயன்ற குற்றப் பிரிவு போலீஸ் நவநீதன் மற்றும் கருப்பசாமியை மறைத்துவைத்திருந்த வாளால் வெட்டியுள்ளனர்.

கமுதி போலீஸ் நிலையத்துக்கு விசாரணை செய்ய வந்த டி.ஐ.ஜி., எஸ்.பி
கமுதி போலீஸ் நிலையத்துக்கு விசாரணை செய்ய வந்த டி.ஐ.ஜி., எஸ்.பி

இதில் இருவருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதைக் கண்டவுடன் விரட்டிச் சென்ற சாயல்குடி போலீஸார் தற்காப்புக்காகக் கையில் கிடைத்த கம்பி, கட்டையால் இருவரையும் தாக்கியுள்ளனர். இதில் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் இருவரையும் சுற்றிவளைத்து அவர்களிடமிருந்த வாளைப் பறிமுதல் செய்து கைதுசெய்தனர்.

இதையடுத்து வெட்டுக்காயம் அடைந்த சார்பு ஆய்வாளர் நவநீதன், கருப்பசாமி மற்றும் போலீஸார் தாக்குதலில் காயமடைந்த குற்றவாளிகள் பரமேஸ்வரன், தினேஷ்குமார் ஆகியோரை கமுதி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் மயில்வாகனன், மாவட்ட எஸ்.பி கார்த்திக் உள்ளிட்டோர் கமுதியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் விசாரணை நடத்திவருகின்றனர். கைதுசெய்யப்பட்டுள்ள இவர்கள் மீது ஏற்கெனவே பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தன்னுடைய காதலியை, தன் கண்முன்னே இருவர் பாலியல் வன்கொடுமை செய்ததை மனம் ஏற்றுக்கொள்ள முடியாமல் காதலன் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.