Published:Updated:

ஆந்திரா அதிர்ச்சி: காதலை ஏற்காத 17 வயது சிறுமி! - நடுரோட்டில் கழுத்தை அறுத்த இளைஞர்

கொலை
கொலை ( representational image )

அனிலின் காதலை அந்தச் சிறுமி ஏற்க மறுத்திருக்கிறார். இதையடுத்து அனில், தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் வசித்துவரும் அனில் என்ற இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை ஒருதலையாகக் காதலித்து வந்திருக்கிறார்.

அந்தச் சிறுமி கஜுவாக்கா பகுதியிலுள்ள சாய்பாபா கோயிலருகே கூட்ட நெரிசலான சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சிறுமியை வழிமறித்த அனில், தன் காதலை தெரியப்படுத்தியிருக்கிறார். அனிலின் காதலை அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதையடுத்து அனில், அந்தச் சிறுமியிடம் தன் காதலை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

கொலை.
கொலை.
Representational Image

இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதலாக மாறியிருக்கிறது, இதனால், கடும் ஆத்திரமடைந்த அனில், தான் மறைத்துவைத்திருந்த கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் சிறுமியின் கழுத்துப் பகுதியை அறுத்திருக்கிறார். தொண்டையில் வெட்டுப்பட்ட சிறுமி, சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் நடந்த இந்தச் சம்பவத்தையடுத்து, அந்தப் பகுதியில் மக்கள் குவிந்தனர். அவர்கள் சிறுமியைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், அதிகப்படியான ரத்தம் வெளியேறிய நிலையில், சம்பவ இடத்திலேயே அந்தச் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, அனிலைக் கைதுசெய்த போலீஸார் அவர்மீது கொலை வழக்கு பதிந்திருக்கிறார்கள். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அந்தச் சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி அறிவித்திருக்கிறார்.

சென்னை: அண்ணனுக்கு பதில் தம்பி? - திருமண நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர் கொலை
அடுத்த கட்டுரைக்கு