Published:Updated:

`வேலைக்குச் சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை!’ -ராணிப்பேட்டை சிறுமிக்கு நேர்ந்த கொடுமை

தணிகாசலம்
தணிகாசலம்

40 வயதுடைய நபர் 16 வயதுச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ராணிப்பேட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் தணிகாசலம் (40). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார். அவருடன் ராணிப்பேட்டையை அடுத்த நரசிங்கபுரம் பைரவா காலனியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமியும் வேலைசெய்தார்.

பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை

இந்த நிலையில், அந்தச் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகிய தணிகாசலம் கட்டாயப்படுத்தியும் மிரட்டியும் பலமுறை தவறான உறவுக்கு ஈடுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், அந்தச் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். தணிகாசலத்தின் மிரட்டலால், கர்ப்பம் தரித்ததைப் பெற்றோரிடம் சொல்லாமல் மறைத்துவந்தார்.

எனினும், உடலில் ஏற்பட்ட மாற்றத்தை வைத்து மகளிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதற்கு, வயிற்றில் கட்டி உள்ளது. அது, வளர்கிறது என்று சிறுமி கூறினார். திடுக்கிட்ட பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்குட்படுத்தினர். அதன் பிறகே, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தனக்கு நேர்ந்த கொடுமையைச் சிறுமி கண்ணீருடன் விவரித்துள்ளார்.

தணிகாசலம்
தணிகாசலம்

அதிர்ச்சியடைந்த பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்தனர். போலீஸார், தணிகாசலத்தைப் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், சிறுமியைத் தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதையடுத்து, ‘போக்ஸோ’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீஸார், தணிகாசலத்தைக் கைதுசெய்தனர்.

அடுத்த கட்டுரைக்கு