Published:Updated:

புதுக்கோட்டை: சிறுமியைத் தனியே அழைத்த காதலன்; அத்துமீறிய நண்பர்கள் - போக்சோ வழக்கில் மூவர் கைது!

பாலியல் தொல்லை

வீட்டுக்குச் சென்ற சிறுமி, வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

புதுக்கோட்டை: சிறுமியைத் தனியே அழைத்த காதலன்; அத்துமீறிய நண்பர்கள் - போக்சோ வழக்கில் மூவர் கைது!

வீட்டுக்குச் சென்ற சிறுமி, வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

Published:Updated:
பாலியல் தொல்லை

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜா (22) என்பவரும் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு சிறுமியைத் தனியாக வெளியே வரும்படி கூறியிருக்கிறார் ராஜா. சிறுமியும் வந்திருக்கிறார். அப்போது சிறுமியைத் தனியாக ஓர் இடத்துக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். அங்கு, இருவரும் தனியாகப் பேசிக்கொண்டிருந்தபோது, ராஜாவின் நண்பர்கள் சின்ராஜ், பிரசாத் ஆகியோர் வந்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் மூவரும் சேர்ந்து கூட்டாக, சிறுமியை மிரட்டிப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

மேலும் இதை வெளியே சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி வீட்டுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டுக்குச் சென்ற சிறுமி, வீட்டிலிருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

புதுக்கோட்டை: சிறுமியைத் தனியே அழைத்த காதலன்; அத்துமீறிய நண்பர்கள் - போக்சோ வழக்கில் மூவர் கைது!

உடனே இது குறித்து அறிந்த அவரின் உறவினர்கள், சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இது குறித்து, சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவுசெய்த கீரமங்கலம் போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சின்ராஜ், பிரசாத் இருவரையும் கைதுசெய்தனர். முக்கியக் குற்றவாளி ராஜா தலைமறைவாகியிருக்கிறார். இந்த நிலையில்தான் தலைமறைவான ராஜாவைக் கைதுசெய்த போலீஸார் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ராஜாவை 14 நாள்கள் சிறைக் காவலில் அடைக்க நீதிபதி சத்யா உத்தரவிட்டார். சிறுமியை நண்பர்கள் கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் கீரமங்கலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.