Published:Updated:

இளைஞரின் லவ் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்?! - போலீஸ் விசாரணையில் சிக்கிய மற்றொரு வாலிபர்

தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

``காவ்யாவுடன் இனயம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அடிக்கடி போனில் பேசியிருக்கிறார். ஆகவே அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். ரஞ்சித்தையும் தேடிவருகிறோம்” என்கிறது போலீஸ்.

இளைஞரின் லவ் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்?! - போலீஸ் விசாரணையில் சிக்கிய மற்றொரு வாலிபர்

``காவ்யாவுடன் இனயம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் அடிக்கடி போனில் பேசியிருக்கிறார். ஆகவே அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். ரஞ்சித்தையும் தேடிவருகிறோம்” என்கிறது போலீஸ்.

Published:Updated:
தற்கொலை ( சித்திரிப்புப் படம் )

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியராஜ். எலெக்ட்ரீஷியன் வேலை செய்துவருகிறார். இவரின் மனைவி இந்திரா புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். சத்தியராஜின் இரண்டாவது மகள் காவ்யா (20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கல்லூரியில் பி.ஏ படித்துவிட்டு உயர்கல்வி படிப்புக்காகத் தயாராகிவந்தார். இந்த நிலையில் சூழிகோணம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் காவ்யாவைக் காதலித்துவந்திருக்கிறார். காவ்யாவும் காதலித்துவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் காவ்யா திடீரென ரஞ்சித்திடம் பேசாமல் தொடர்பைத் துண்டித்திருக்கிறார்.

தற்கொலை செய்துகொண்ட பெண்
தற்கொலை செய்துகொண்ட பெண்

ரஞ்சித் செல்போன் மூலம் அழைத்தும் காவ்யா போனை எடுக்காததால், அவர் செல்லும் பாதையில் பின்தொடர்ந்து சென்று காதலிக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். காவ்யா திரும்பிப் பார்க்காததால் கோபமடைந்த ரஞ்சித், `நாம் இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டுவிடுவேன்' என மிரட்டியிருக்கிறார். மேலும் ரஞ்சித் தொடர்ந்து லவ் டார்ச்சர் செய்துவந்ததாகக் கூறப்படுகிறது. இது பற்றி குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் காவ்யா தரப்பு சில வாரங்களுக்கு முன்பு புகார் அளித்திருக்கிறது. போலீஸார் இரண்டு தரப்பையும் அழைத்து விசாரித்துள்ளனர். காவல் நிலையத்தில் இரு தரப்பும் சமரசமாகச் சென்றதாகக் கூறப்படுகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு சிறிது காலம் அமைதியாக இருந்த ரஞ்சித், கடந்த வாரம் மீண்டும் காவ்யாவைப் பின்தொடர்ந்து சென்று லவ் டார்ச்சர் கொடுத்திருப்பதாகவும், இதையடுத்து காவ்யாவின் சகோதரன் றோசன் மேத்தியூ, தனது நண்பர்களுடன் சென்று ரஞ்சித்தைக் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது றோசன் மேத்யூ உள்ளிட்டவர்களை ரஞ்சித் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் காவ்யா, நேற்று வீட்டிலுள்ள தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

லவ் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்
லவ் டார்ச்சரால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண்

இது குறித்து தகவலறிந்த மார்த்தாண்டம் போலீஸார் காவ்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். போலீஸார் காவ்யாவின் செல்போனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதைத் தொடர்ந்து இனயத்தைச் சேர்ந்த 19 வயதுள்ள வாலிபர் ஒருவரை போலீஸார் பிடித்து விசாரணை நடத்திவருகின்றனர். ரஞ்சித் மீதும் வழக்கு பதிவுசெய்து போலீஸார் அவரைத் தேடிவருகின்றனர். உண்மையான குற்றவாளி ரஞ்சித் என்றும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் எனவும் காவ்யாவின் உறவினர்கள் கூறிவருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், "காவ்யாவுடன் இனயம் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அடிக்கடி போனில் பேசியிருக்கிறார். ஆகவே அவரிடம் விசாரணை நடத்திவருகிறோம். தலைமறைவான ரஞ்சித்தையும் தேடிவருகிறோம்" என்றனர்.