Published:Updated:

திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தை... பார்ட்டிக்கு அழைத்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்

கொலை

மும்பையில் திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தையை பார்ட்டிக்கு அழைத்து, கொலைசெய்த காதலன் கைதுசெய்யப்பட்டார்.

திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தை... பார்ட்டிக்கு அழைத்து கழுத்தை அறுத்து கொன்ற காதலன்

மும்பையில் திருமணத்துக்கு மறுத்த காதலியின் தந்தையை பார்ட்டிக்கு அழைத்து, கொலைசெய்த காதலன் கைதுசெய்யப்பட்டார்.

Published:Updated:
கொலை

மும்பை உல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் ஷா (26). பீகாரைச் சேர்ந்த ஷா, கடந்த ஐந்து ஆண்டுகளாக மும்பையில் தங்கியிருந்து வேலை செய்துவருகிறார். ஷா அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரைக் காதலித்துவந்தார். காதலியைத் திருமணம் செய்துகொள்ள காதலியின் தந்தையான கமல்ஜித் என்பவரிடம் சென்று நேரடியாகப் பெண் கேட்டார் ஷா. ஆனால் கமல்ஜித் தனது மகளைத் திருமணம் செய்து கொடுக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதை ஏற்றுக்கொண்ட ஷா, பெண் கேட்டதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

கொலை
கொலை

இச்சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களில் ஷா சிறப்பு பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். அந்த பார்ட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்று தனது காதலியின் தந்தைக்கு அழைப்பு விடுத்தார். காதலியின் தந்தை கமல்ஜித்தும் பார்ட்டியில் கலந்துகொண்டார். பார்ட்டியில் அனைவரும் நல்ல குடிபோதையில் இருந்தபோது கமல்ஜித்தை ஷா ஒதுக்குப்புறமான இடத்துக்கு அழைத்துச் சென்று, ``எனக்கு உன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க மாட்டாயா” என்று கேட்டு கமல்ஜித்தின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். பின்னர் ஷா, தன் காதலிக்கு போன் செய்து, ``உன் தந்தை இனி வீட்டுக்கு வரவே மாட்டார். அவரைக் கொலை செய்துவிட்டேன்” என்று தெரிவித்தார். இது குறித்து உடனே அந்தப் பெண், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து ஷாவைக் கைதுசெய்து, கமல்ஜித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கைதுசெய்யப்பட்ட ஷாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism