Published:Updated:

திருப்பூர்: நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி!

தற்கொலை முயற்சி

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டுவந்த தனியார் நீட் பயிற்சி மையத்தின் 3-வது மாடியிலிருந்து மாணவி கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் ரங்கம்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகளுக்கு வயது 18. அந்த மாணவி, திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியார் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் படித்துவருகிறார்.

மகளை அழைத்துச் செல்ல செவ்வாய்க்கிழமை மாலை பயிற்சி மையத்தில் மணிகண்டன் காத்திருந்தார். பயிற்சி வகுப்பு முடிந்து, கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற மாணவி திடீரென்று 3-வது மாடியிலிருந்து கீழே குதித்தார். இதில், அவருக்கு மண்டை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் மாணவியை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை
சிகிச்சை

பின்தலை மற்றும் இடுப்புப் பகுதியில் மாணவிக்கு பலத்த காயம் ஏற்பட்டிருப்பதால் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது குறித்து போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.