Published:Updated:

`பள்ளம் தோண்டுவதை அனுமதிக்க மாட்டேன்!'- மனைவி கொலையில் கணவனைச் சிக்கவைத்த அரசின் திட்டம்

கோவாவில் உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியை உயிருடன் புதைத்த கணவர், அங்கு நடந்த அரசின் திட்டப்பணிகளால் சிக்கியுள்ளார்.

மனைவி புதைக்கப்பட்ட இடம்
மனைவி புதைக்கப்பட்ட இடம் ( ANI )

கோவா, பிசோலிம் பகுதிக்கு அருகில் உள்ள சிறிய கிராமம் நர்வெம். அங்கு தில்லாரி நீர்ப்பாசன திட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. வழக்கம்போல் கடந்த வியாழக்கிழமையும் வேலைகள் நடந்துகொண்டிருந்துள்ளன. தொழிலாளர்கள், இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர்.

பெண் புதைக்கப்பட்ட இடம்
பெண் புதைக்கப்பட்ட இடம்

அப்போது அங்கு வந்த துக்காராம் என்பவர், ‘இங்கு பள்ளம் தோண்ட நான் அனுமதிக்க மாட்டேன், வேலைகளை உடனே நிறுத்துங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். அவர் ஏதோ உளறுவதாக நினைத்த தொழிலாளர்கள், அவரின் பேச்சைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தங்கள் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். துக்காராமும் பணிகள் நடக்கும் இடத்திலேயே இருந்துள்ளார். இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் தொடங்கின. முதல் வாளியில் மண் தோண்டப்பட்டுவிட்டது. இரண்டாம் வாளி மண்ணைத் தோண்டிக்கொண்டிருக்கும்போது, மண்ணில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.

`சமைக்கமாட்டாள்; தாயை அசிங்கமாகத் திட்டினாள்'- மனைவியைக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சென்னை டிரைவர்

பின்னர் இயந்திரத்தை நிறுத்திவிட்டு, சில தொழிலாளர்கள் மட்டும் பள்ளத்துக்கு அருகில் சென்று பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். மண்ணில் தட்டுப்பட்டது ஒரு பெண்ணின் உடல், பின்னர் உடனடியாக பிசோலிம் காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். காவலர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள் துக்காராம் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். பின்னர் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிய போலீஸார் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இறப்பு
இறப்பு
மாதிரி புகைப்படம்

அப்போது துக்காராம் பற்றியும் பள்ளம் தோண்ட அவர் எதிர்ப்பு தெரிவித்த விஷயங்களையும் தொழிலாளர்கள், போலீஸாரிடம் கூறியுள்ளனர். உடனடியாக காவலர்களின் மொத்தக் கவனமும் துக்காராம் பக்கம் திரும்பியுள்ளது. அவரை அழைத்து விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியில் வந்துள்ளன.

துக்காராம் அளித்த வாக்குமூலத்தில், ‘என் மனைவி தான்வி, 44 வயதானவர். அவருக்கு நீண்ட நாள்களாக உடல்நிலை சரியில்லை. பல மருத்துவமனைகள், பல இடங்கள் என அலைந்தும் அவர் உடல் குணமடையவில்லை. நான் கூலி வேலை செய்வதால், என் மனைவிக்குத் தேவையான மருத்துவச் செலவுகளைச் செய்ய முடியவில்லை.

இதே காரணத்தால் 14 வயதான என் மகனும் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. மனைவியின் உடல்நிலையால் என் குடும்பம் பெரும் சிரமத்தைச் சந்தித்தது. அதனால் அவளைக் கொலை செய்ய முடிவு செய்து, நீர்ப்பாசனப் பணிகள் நடக்கும் இடத்துக்கு அருகில் உயிருடன் புதைத்துவிட்டேன். அங்கு யாரும் வரமாட்டார்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் போதுதான், பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்றன. அதன் காரணமாகவே பணிகளைத் தடுத்தேன்” என்று கூறியுள்ளார்.

கைது
கைது
மாதிரி புகைப்படம்

இதைக் கேட்டு அதிர்ந்த காவலர்கள், மனைவியை உயிருடன் புதைத்த கணவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடந்துவருவதாக பிசோலிம் இன்ஸ்பெக்டர் சஞ்சய் தால்வி தெரிவித்துள்ளார்.