Published:Updated:

பரிகார பூஜை; 5 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - சாமியார், அவரின் மனைவிமீது வழக்கு

காவல்துறை

பல ஆண்டுகளாக ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது.

பரிகார பூஜை; 5 ஆண்டுகளாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண் - சாமியார், அவரின் மனைவிமீது வழக்கு

பல ஆண்டுகளாக ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த சாமியார்மீது காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்திருக்கிறது.

Published:Updated:
காவல்துறை

கர்நாடக மாநிலம், அவலஹள்ளியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் ஆனந்தமூர்த்தி என்ற சாமியாரைச் சந்தித்திருக்கிறார். அப்போது, அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெரும் ஆபத்து வரவிருக்கிறது. உடனே சில பரிகார பூஜைகள் வீட்டில் செய்ய வேண்டும் எனக் கூறியிருக்கிறார் சாமியார் ஆனந்தமூர்த்தி. அந்தப் பகுதி மக்களால் சக்திவாய்ந்த சாமியார் எனக் கூறப்பட்டதால் பாதிக்கப்பட்ட பெண்ணும் சம்மதித்து தன் இல்லத்துக்கு அழைத்திருக்கிறார். குறிப்பிட்ட நாளில் சாமியாரும், அவர் மனைவி லதாவும் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று பூஜையைத் தொடங்கியிருக்கின்றனர்.

பாலியல் வன்கொடுமை முயற்சி
பாலியல் வன்கொடுமை முயற்சி
சித்திரிப்புப் படம்

அப்போது தீர்த்தம் எனக் கூறி சாமியார் ஆனந்தமூர்த்தி போதைப்பொருளைக் கொடுத்து, அந்தப் பெண்ணிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கிறார். இதை சாமியாரின் மனைவி லதா வீடியோவாகப் பதிவுசெய்திருக்கிறார். மேலும், இந்தச் செய்தி வெளியே தெரிந்தால், வீடியோவை வெளியிட்டுவிடுவோம் எனவும் மிரட்டியிருக்கின்றனர். அதைத் தொடர்ந்து அந்த வீடியோவைக் காண்பித்து மிரட்டி, தன்னைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து காவல்துறை சாமியார் ஆனந்தமூர்த்தி, அவரின் மனைவி லதா மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்து விசாரித்துவருகின்றனர்.