Published:Updated:

ரூ.50 கோடி தங்கம், வைரம்; பொம்மை முகமூடி! - திருச்சியைத் திணறவைத்த அதிகாலை கொள்ளை

lalitha jewellery theft
lalitha jewellery theft

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸில் கொள்ளையடித்த திருடர்களின் புகைப்படங்களைக் காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் நகைக்கடையில் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் கொள்ளை போன சம்பவத்தில் கொள்ளையர்களின் உருவப்படம் போலீஸாரிடம் சிக்கியுள்ளது. அந்தப் புகைப்படத்தில் நகைக் கொள்ளையர்கள் இருவர் குழந்தைகள் விளையாடும் பொம்மை முகமூடிகளை அணிந்தவாறு நடந்து வருகிறார்கள்.

lalitha jewellery
lalitha jewellery

சம்பவம் குறித்து திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் மயில்வாகனன் தலைமையிலான போலீஸார் லலிதா ஜூவல்லரி நகைக் கடையின் மேல்தளத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் கொள்ளையர்கள் நேற்று அதிகாலை 2.30 முதல் விடியற்காலை 4.30 மணி வரை நகைக் கடைக்குள் இருந்தது தெரியவந்துள்ளது.

`சுவரில் துளை; பலகோடி ரூபாய் நகைகள் மாயம்!' - திருச்சியை அதிர வைத்த கொள்ளை

மேலும், 16 கிலோ தங்க நகைகள் மட்டுமல்லாமல், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளும் கொள்ளைபோனதால் அதன் மதிப்பு சுமார் 50 கோடிக்கும் மேல் இருக்கும் எனத் தோராயமாகக் கூறப்படுகிறது. போலீஸாரின் விசாரணை தொடர்வதால் கொள்ளை போன நகைகள் குறித்த முழு மதிப்பும் வெளிவரவில்லை. மேலும், கொள்ளையடித்த நகைகளை எந்த வழியாக வாகனத்தில் எடுத்துச் சென்றார்கள் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

lalitha jewellery theft
lalitha jewellery theft

நகைக்கடையில் பணியாற்றும் சுமார் 160-க்கும் மேற்பட்ட பணியாளர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள் போலீஸார். லலிதா ஜுவல்லரி கடையில் நடந்த இந்தக் கொள்ளைச் சம்பவம், திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு