Published:Updated:

திருச்சி: பெர்ப்ஃயூம் பாட்டிலில் கடத்திவரப்பட்ட தங்கம்; சந்தேகச் சோதனையில் சிக்கிய நபர்!

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்

கடந்த சில மாதங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்களில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்தி வருவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி: பெர்ப்ஃயூம் பாட்டிலில் கடத்திவரப்பட்ட தங்கம்; சந்தேகச் சோதனையில் சிக்கிய நபர்!

கடந்த சில மாதங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்களில் மறைத்து வைத்து தங்கத்தைக் கடத்தி வருவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Published:Updated:
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அரங்கேறிவரும் தங்கக்கடத்தல் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளிலிருந்து அதிக அளவில் கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தின் வழியாக இறங்குவதும், அதனை அவ்வப்போது அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. விமான நிலைய அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் வகையில், விஞ்ஞானிகளைப் போல இந்தக் கடத்தல் கும்பல்கள் டிஸைன் டிஸைனாக தங்கத்தைக் கடத்தி வந்தாலும், அதிகாரிகளிடம் வசமாய்ச் சிக்கிக் கொள்வது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், இந்த முறை கடத்தல் கும்பல் கையில் எடுத்திருந்தது பெர்ஃப்யூம் பாட்டிலும், மாய்ஸ்ட்ரைஸர் க்ரீம் டப்பாவும்...

பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்
பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கம்

நேற்று மாலை சென்னையிலிருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு இண்டிகோ விமானம் ஒன்று தரையிறங்கியிருக்கிறது. அந்த விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவர் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த நபரை விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் தனி அறைக்கு அழைத்துச் சென்று அவரையும், அவரது உடைமைகளையும் சோதனை செய்திருக்கின்றனர். அப்போது அந்தப் பயணியின் லக்கேஜ் பெட்டியில் பெண்கள் பயன்படுத்தும் இரண்டு பர்ஸுகள் இருந்திருக்கின்றன. அதிகாரிகள் திறந்து பார்க்க, ஒவ்வொரு பர்ஸிலும் முகத்துக்குப் பயன்படுத்தும் மாய்ஸ்ட்ரைஸர் க்ரீம் டப்பா ஒன்றும், பெர்ஃப்யூம் பாட்டில் ஒன்றும் இருந்திருக்கின்றன. சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் அதனை உடைத்துப் பார்த்திருக்கின்றனர். அப்போது பெர்ஃப்யூம் பாட்டிலினுள் செவ்வக வடிவில் மடித்து வைக்கப்பட்டிருந்த 3 தங்க ஷீட்டுகளும், 7 தங்கக் கம்பிகளும் இருந்திருக்கின்றன. மேலும், மாய்ஸ்ட்ரைஸர் க்ரீம் டப்பாவினுள் வட்ட வடிவில் 3 தங்க ஷீட்டுகளும் இருந்திருக்கின்றன. அதையடுத்து விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் ரூ.13,36,440 மதிப்பிலான அந்த 259 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே திருச்சி விமான நிலையத்தில் எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்களில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வருவது அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.