Published:Updated:

சென்னை நகை வியாபாரியிடம் திருட்டுப்போன 6 கிலோ தங்க நகை - தஞ்சாவூர் போலீஸார் விசாரணை

நகைத் திருட்டு - போலீஸ் விசாரணை ( ம.அரவிந்த் )

நகைத் திருட்டில் ஈடுப்பட்டவர்கள், நகை வியாபாரி மணி மொத்தமாக நகை கொண்டுவருவதை அறிந்துகொண்டு, அவரைப் பின்தொடர்ந்து வந்து திருடிச் சென்றிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதும் போலீஸார், அதன் அடிப்படையில் விசாரணை செய்துவருகின்றனர்.

சென்னை நகை வியாபாரியிடம் திருட்டுப்போன 6 கிலோ தங்க நகை - தஞ்சாவூர் போலீஸார் விசாரணை

நகைத் திருட்டில் ஈடுப்பட்டவர்கள், நகை வியாபாரி மணி மொத்தமாக நகை கொண்டுவருவதை அறிந்துகொண்டு, அவரைப் பின்தொடர்ந்து வந்து திருடிச் சென்றிருக்க வாய்ப்பிருப்பதாகக் கருதும் போலீஸார், அதன் அடிப்படையில் விசாரணை செய்துவருகின்றனர்.

Published:Updated:
நகைத் திருட்டு - போலீஸ் விசாரணை ( ம.அரவிந்த் )

தஞ்சாவூரில் சென்னையைச் சேர்ந்த நகை வியாபாரி விற்பனை செய்வதற்காக பேக்கில் கொண்டுவந்த சுமார் 6 கிலோ தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைவைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நகை திருட்டுப்போன கடையில் போலீஸ் விசாரணை
நகை திருட்டுப்போன கடையில் போலீஸ் விசாரணை

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணி (55). சென்னையிலுள்ள மொத்த நகை வியாபாரியிடம் வேலை செய்துவருகிறார். அவர் கொடுக்கும் நகைகளை ஒவ்வொரு ஊராக எடுத்துச் சென்று நகைக் கடைகளில் விற்பனை செய்துவருகிறார். அப்படி வரும்போது தான் கொடுத்த நகைகளை விற்பனை ஆகாமல் இருந்தால் அவற்றை திருப்பிப் பெற்றுகொள்வதையும், விற்பனை ஆன நகைகளுக்குப் பணத்தை வசூல் செய்து தன் உரிமையாளரிடம் கொடுப்பதையும் வழக்கமாகக்கொண்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த நிலையில் கடந்த செவ்வாய்கிழமை இரவு சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு நகைகள் விற்பதற்காகச் சென்றுள்ளார். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே சென்றவர், அங்கிருந்த பிரபல ஸ்வீட் கடை ஒன்றில் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அப்போது அவர் கொண்டு வந்த பேக்கில் 6 கிலோ தங்க நகைகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு, தேவையானவற்றை வாங்கிக்கொண்டு அதற்கான பணத்தைக் கொடுப்பதற்காக நகை இருந்த பேக்கைக் கீழே வைத்துவிட்டு பில்லைக் கொடுத்துள்ளார். சில நிமிடங்கள் கழித்து, தன் பேக்கைப் பார்த்துள்ளார். ஆனால் பேக்கைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், `என்னோட பேக் எங்கே... அதுல கிலோ கணக்குல தங்க நகையும், பணமும் இருந்துச்சு’ எனக் கத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டது. பின்னர் இது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் மணி புகார் அளித்தார். அதில் காணாமல்போன பேக்கில் 5 கிலோ புதிய நகைகள்,1.2 கிலோ உருக்கப்பட்ட நகைகள் மற்றும் ரூ.14 லட்சம் பணமும் இருந்தன. அதிலிருந்த நகைகளின் மொத்த மதிப்பு ரூ. 2 கோடி இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீஸார் நகை இருந்த பேக் திருட்டுபோனது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை செய்துவருகின்றனர்.

சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்
சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள்

இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக கருணாகரன், ஸ்ரீதர், சந்திரா என மூன்று இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் மேலும் எஸ்.பி-யின் நேரடிக் கண்காணிப்பில் உள்ள இரண்டு தனிப்படைகள் என மொத்தம் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தனிப்படை போலீஸ் டீம், ஸ்வீட் கடை மற்றும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தனர். அதில் வெள்ளை நிறச் சட்டை அணிந்துள்ள சுமார் எட்டு பேர்கொண்ட கும்பல் நகை இருந்த பேக்கை எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது. அதை அடிப்படையாகவைத்துக்கொண்டு பல்வேறு கோணங்களில் தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸ் விசாரணை

நகைத் திருட்டில் ஈடுப்பட்டவர்கள் நகை வியாபாரி மணி மொத்தமாக நகை கொண்டுவருவதை அறிந்துகொண்டு அவரைப் பின்தொடர்ந்து வந்து திருடிச் சென்றிருக்க வாய்ப்புள்ளதாகக் கருதும் போலீஸார், குற்றவாளிகளைப் பிடிப்பதில் தீவிரம் காட்டிவருகின்றனர். தஞ்சாவூரில் 6 கிலோ தங்க நகை திருடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism