Published:Updated:

மயிலாடுதுறை: முந்திச் செல்ல வழி விடாததால் ஆத்திரம் - அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்!

அரசுப் பேரூந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

மயிலாடுதுறையில் முந்திச் செல்ல வழி விடாததால், இளைஞர்கள் சிலர் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மயிலாடுதுறை: முந்திச் செல்ல வழி விடாததால் ஆத்திரம் - அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்!

மயிலாடுதுறையில் முந்திச் செல்ல வழி விடாததால், இளைஞர்கள் சிலர் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
அரசுப் பேரூந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

மயிலாடுதுறையிலிருந்து நேற்று முருகன் தோட்டம் பகுதிக்கு `10C' என்ற அரசுப் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கிளம்பியது. அப்போது மறையூர் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் சிலர் பேருந்தை முந்திச் செல்வதற்கு இடம் தராததால், பேருந்தை வழிமறித்து நடத்துனர், ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருகட்டத்தில் அந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுநர் ராமதாஸைத் தாக்கிக் கத்தியால் குத்த முயன்றிருக்கின்றனர். அப்போது, ஓட்டுநர் ராமதாஸ் தடுத்தபோது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஓட்டுநர் ராமதாஸ் மயிலாடுதுறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அரசுப் பேரூந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - போராட்டம்
அரசுப் பேரூந்து ஓட்டுநர் மீது தாக்குதல் - போராட்டம்

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, அரசுப் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் தாக்குதல் நடத்திய இளைஞர்களைக் கைதுசெய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெற்றுவருவதால் பேருந்துகளை உடனடியாக இயக்கும்படி காவல்துறையினர் கோரிக்கை விடுத்தனர். மேலும் கடந்த வாரம் பேருந்து ஓட்டுநர் மீது நடந்த தாக்குதல் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களையும் கைதுசெய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். ``இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக  காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என ஊழியர்கள் தெரிவித்தனர்.

அரசு பேரூந்து ஓட்டுநர் மீது தாக்குதல்
அரசு பேரூந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

அதையடுத்து, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள்மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பேருந்துகளை இயக்கத் தொடங்கினர் . இந்தப் போராட்டத்தின் காரணமாக  மயிலாடுதுறையிலிருந்து சென்னை, மதுரை, வேலூர், திருச்சி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர், அனைத்து அரசுப் பேருந்துகளும் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism