Published:Updated:

டாக்டர் Vs போலீஸ்: `எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீங்களா?’ - மாறி மாறிப் புகார் | நடந்தது என்ன?

அரசு மருத்துவமனை, கோவில்பட்டி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை வளாகத்துக்குள் நுழைந்த டாக்டருக்குப் பாதுகாப்பு போலீஸார் சல்யூட் அடிக்கவில்லை எனச் சொல்லி போலீஸாரிடம் டாக்டர் எகிறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் Vs போலீஸ்: `எனக்கு சல்யூட் அடிக்க மாட்டீங்களா?’ - மாறி மாறிப் புகார் | நடந்தது என்ன?

தூத்துக்குடி அரசு மருத்துவமனை, கொரோனா சிகிச்சை வளாகத்துக்குள் நுழைந்த டாக்டருக்குப் பாதுகாப்பு போலீஸார் சல்யூட் அடிக்கவில்லை எனச் சொல்லி போலீஸாரிடம் டாக்டர் எகிறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published:Updated:
அரசு மருத்துவமனை, கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கிவருகிறது. கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த காளிராஜ், மாரிராஜ், முத்துகுமார் ஆகிய மூன்று கைதிகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் உள்நோயாளிகளாகச் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த மூன்று கைதிகளுக்குப் பாதுகாப்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தின் கனகராஜ், ஜெகன், ராஜேந்திரன் ஆகிய மூறு போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

இந்த நிலையில், இதே மருத்துவமனையின் மருத்துவர் சீனிவாசன், கொரோனா சிகிச்சை வார்டுக்குள் கோட் அணியாமல் மஃப்டியில் வந்துள்ளார். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த மூன்று போலீஸாரும் செல்போனைப் பார்த்துக்கொண்டிருந்தனராம். அதைப் பார்த்த மருத்துவர் சீனிவாசன், ``என்னைத் தெரியலையா... சல்யூட் அடிக்க மாட்டீங்களா... டாக்டர் பெருசா... போலீஸ் பெருசா? பத்தம் கிளாஸ் படிச்சுட்டு போலீஸ் வேலைக்கு வந்துட்டா எம்.பி.பி.எஸ்ஸைப் பத்தி என்ன தெரியும்... வேலை நேரத்தில் வேலை பாக்காமல் செல்போனை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்களே” என எகிறினாராம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதற்கு மூன்று போலீஸாரில் ஒருவர், ``சார்... நான் எம்.காம் முடிச்சிருக்கேன். விருப்பப்பட்டுத்தான் போலீஸ் வேலைக்கு வந்திருக்கேன். போலீஸ் வேலையைத் தப்பாப் பேசாதீங்க. உங்க கையில ஸ்டெதாஸ்கோப்பும் இல்லை. வெள்ளை நிறக் கோட்டும் இல்லை. பார்த்த உடனே நீங்க டாக்டர்னு எங்களுக்கு எப்படித் தெரியும்? எங்களோட உயரதிகாரிகளுக்குத்தான் நாங்க சல்யூட் அடிக்கணும். நீங்களும் அரசு ஊழியர். நாங்களும் அரசு ஊழியர். டாக்டர்களைப் பார்த்தா சல்யூட் அடிக்கணும்னு எங்களுக்கு சொல்லித் தரலை” என பதிலுக்கு எகிறியுள்ளார்.

அரசு மருத்துவமனை, கோவில்பட்டி
அரசு மருத்துவமனை, கோவில்பட்டி

இதற்கு பதில் ஏதும் பேசாத அந்த டாக்டர் கோபத்தில் அங்கிருந்து சென்றிருக்கிறார். பின்னர், ``நான் கொரோனா டூட்டிக்காக வார்டுக்குள் சென்றபோது வெளியில் இருந்த மூன்று போலீஸார் கால் மேல் கால் போட்டு செல்போன் பார்த்துக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் காவல் பணி செய்யவில்லை. என்னை ஒருமையில் பேசினார்கள். நோயாளிகள் முன்பு இப்படி என்னைப் பேசியது எனக்கு அவமானமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எனவே, அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோவில்பட்டி டி.எஸ்.பி உதயசூரியனிடம் புகார் அளித்தார் மருத்துவர் சீனிவாசன். இதைக் கேள்விப்பட்ட மூன்று போலீஸாரும் நடந்ததை விவரித்து மருத்துவர் சீனிவாசன் மீது டி.எஸ்.பியிடம் புகார் அளித்தனர். இதையடுத்து கிழக்கு காவல் நிலைய போலீஸார் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளிடம் விசாரணை நடத்தினர்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்
கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம்

``டாக்டர் தொழில் உயிரைக் காக்கிற புனிதமான தொழில்தான். எல்லோரும் டாக்டர் ஆகிட்டா 24 மணி நேரமும் மக்களைக் காக்கிற போலீஸ் வேலையைப் பார்க்குறது யாரு?” என்கின்றனர் போலீஸ் வேலையைச் சுவாசமாக நினைக்கும் போலீஸார். ``ஒரு சல்யூட்டுக்காக இப்படி அக்கப்போர் நடத்தியிருக்க வேண்டாம். இது தேவையில்லாதது” என டாக்டர்கள் தரப்பிலும் தலையில் அடித்துக்கொள்கிறார்களாம் .

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism