Published:Updated:

`அரசு பணம் ரூ.2 கோடியுடன் தலைமறைவு' - சைபர் க்ரைம் உதவியுடன் கருவூல கணக்கரை தேடும் காவல்துறை

மாவட்ட கருவூலம்

ஓய்வூதியர்கள் பணம் ரூ. 29 லட்சத்தை கையாடல் செய்ததாக தேடப்பட்டு வரும் கருவூல கணக்கர், மேலும் ஒரு கோடியே 88 லட்சத்தை போலி பில் மூலம் கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

`அரசு பணம் ரூ.2 கோடியுடன் தலைமறைவு' - சைபர் க்ரைம் உதவியுடன் கருவூல கணக்கரை தேடும் காவல்துறை

ஓய்வூதியர்கள் பணம் ரூ. 29 லட்சத்தை கையாடல் செய்ததாக தேடப்பட்டு வரும் கருவூல கணக்கர், மேலும் ஒரு கோடியே 88 லட்சத்தை போலி பில் மூலம் கையாடல் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Published:Updated:
மாவட்ட கருவூலம்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் முதுகுளத்தூர் சார்நிலை கருவூலத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ரகசிய குறியீடு எண்ணை திருடி ஓய்வூதியர்கள் பணம் ரூ.29 லட்சத்தை தனது வங்கிக்கணக்கிற்கு ஆன்லைன் மூலம் பணப்பரிமாற்றி செய்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து முதுகுளத்தூர் சார்நிலை கருவூல உதவி அலுவலர் சிராஜூதின் அளித்த புகாரின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான முனியசாமியை தேடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2016 முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரை ராமநாதபுரம் மாவட்ட தலைமை கருவூலத்தில் கணக்கராக பணியில் இருந்துள்ளார் அவர். எனவே முதுகுளத்தூரில் பணத்தை கையாடல் செய்தது போல் அங்கும் பணியாற்றியபோது பணத்தை கையாடல் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மதுரை மண்டல கருவூல இயக்குநர் அலுவலகத்திலிருந்து சில அதிகாரிகள் கடந்த இரண்டு ஆண்டு கணக்கு வழக்குகளை பார்த்த போது அங்கும் ரூ.45 லட்சத்தை கையாடல் செய்திருப்பதை கண்டுபிடித்தனர்.

பின்னர் கூடுதல் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு முதல் அவர் ஓய்வூதியர்களுக்கு பணபரிமாற்றம் செய்த அனைத்து கணக்குகளையும் நுணுக்கமாக ஆய்வு செய்தனர். அதில் ஒரு கோடியே 88 லட்சத்தை 74 ஆயிரம் ரூபாய் அரசு பணத்தை கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.

கணக்கர் முனியசாமி
கணக்கர் முனியசாமி

இதுகுறித்து கருவூல அதிகாரிகளிடம் நாம் பேசியபோது, "2020 வரை கருவூல கணக்குகள், ஓய்வூதியர்கள் பணப்பரிமாற்றம் அனைத்தும் பில் புக்குகள் மூலம் கணக்கு வைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது. 2020-க்கு பிறகு அனைத்தும் டிஜிட்டலாக மாற்றியமைக்கப்பட்டது. முனியசாமி டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கு முன்பு பில் புக்கில் ஓ.சி என்று நாங்கள் சொல்லக்கூடிய ஒரிஜினல் காபியில் ஓய்வூதியர்கள் பெயர் மற்றும் வங்கி கணக்கையும், எப்.சி என்று சொல்லும் 'கார்பன் பேப்பர்' வைத்து எழுதும் பேஃர் காப்பியில் இவருடைய வங்கி கணக்கை எழுதி பணத்தை எடுத்துள்ளார். இதனால் 2016 முதல் 2019 வரையிலான ஐந்து ஆண்டு பில் புக்குகளை 'இன்ச்பை இன்ச்சாக ஆய்வு செய்ததில் மாதம் 10 லட்சம், 15 லட்சம், 20 லட்சம் என கையாடல் செய்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

ஏற்கனவே ரூ.29 லட்சத்தை கையாடல் செய்த வழக்கில் முனியாமி தேடப்பட்டு வரும் நிலையில், தற்போது மேலும் ஒரு கோடியே 88 லட்சத்தை கையாடல் செய்தது தொடர்பாக எஸ்.பியிடம் மாவட்ட தலைமை கருவூல அலுவலர் சேஷன் புகார் அளித்துள்ளார். கிட்டத்தட்ட இரண்டு கோடியே 17 லட்சம் ரூபாய் பணத்தை கையாடல் செய்துவிட்டு போலீSyக்கு கண்ணாமூச்சி காட்டி வருகிறார் முனியசாமி.

சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.