Published:Updated:

செங்கல்பட்டு: பள்ளியின் 2-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்ற 9-ம் வகுப்பு மாணவி!

மாணவி தற்கொலை முயற்சி

இன்று மதியம் அந்த மாணவி பள்ளி வளாகத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

செங்கல்பட்டு: பள்ளியின் 2-வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்ற 9-ம் வகுப்பு மாணவி!

இன்று மதியம் அந்த மாணவி பள்ளி வளாகத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Published:Updated:
மாணவி தற்கொலை முயற்சி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகில் உள்ள பூஞ்சேரி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்த பள்ளியில் மாமல்லபுரம் பகுதியைச் சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இன்று பள்ளியில் ஆசிரியர்கள் அந்த மாணவியின் பெற்றோர்களிடம் பேசவேண்டும் என்று அவரிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. தன்னை பற்றிப் பெற்றோர்களிடம் ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்று மாணவி பதற்றத்துடன் காணப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 செங்கல்பட்டு அரசு மருத்துவமனை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை

இந்த சூழலில், இன்று மதியம் அந்த மாணவி பள்ளி வளாகத்தின் இரண்டாவது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மாணவி கீழே விழுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கீழே விழுந்ததில் கை, கால் மற்றும் இடுப்பு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மாணவிக்குத் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தகவலறிந்து வந்த மாமல்லபுரம் பகுதி போலீஸார், மாணவி தற்கொலை முயற்சி செய்துகொண்டது தொடர்பாகப் பள்ளியில் விசாரணை நடத்திவருகிறார்கள். தற்போதைய நிலையில், மாணவி ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாமல்லபுரம் காவல்நிலையம்
மாமல்லபுரம் காவல்நிலையம்

கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி மாணவி ஒருவர், பள்ளி வளாகத்திலேயே மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்ள முயற்சி செய்திருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.