Published:Updated:

வீட்டுச் சுவரில் ரத்தக்கறை; பள்ளத்தில் மனைவியின் சடலம் - நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி?!

கைதான மோகன்

மோகனின் மனைவியைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். மோகனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் மோகன் வீட்டுக்கு திடீரெனச் சென்றுள்ளனர்.

வீட்டுச் சுவரில் ரத்தக்கறை; பள்ளத்தில் மனைவியின் சடலம் - நாடகமாடிய கணவர் சிக்கியது எப்படி?!

மோகனின் மனைவியைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். மோகனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் மோகன் வீட்டுக்கு திடீரெனச் சென்றுள்ளனர்.

Published:Updated:
கைதான மோகன்

நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகிலுள்ள புத்தூர் வயல் பகுதியைச் சேர்ந்தவர் 56 வயதான மோகன். இவரின் மனைவி உஷாவைக் காணவில்லை எனத் தன் மைத்துனருடன் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர் மோகனின் மனைவியைக் கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். எனினும், மோகனின் நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணை என்ற பெயரில் மோகனின் வீட்டுக்கு திடீரெனச் சென்றுள்ளனர். வீட்டுச் சுவரில் சில இடங்களில் ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்ட காவல்துறையினர், மோகனிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மனைவி உஷாவைக் கொலைசெய்த உண்மையைத் தெரிவித்திருக்கிறார் மோகன். போலீஸார், அவரை உடனடியாகக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

உயிரிழந்த உஷா
உயிரிழந்த உஷா

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து காவல்துறையினர், "இந்தத் தம்பதியருக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுவந்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி கூடலூரில் நடைபெற்ற உறவினர் திருமணவிழாவில் மோகன், உஷா இருவரும் தனித்தனியாக பங்கேற்றுள்ளனர். மறுநாள் காலையில் தன் மனைவியைக் காணவில்லை என அக்கம் பக்கத்தினரிடம் மோகன் தெரிவித்ததோடு, உஷாவின் தம்பி சத்யனை அழைத்துக்கொண்டு வந்து புகார் அளித்தார். மோகனிடமே விசாரணை நடத்தினோம். குடும்பத் தகராறு காரணமாக ஏற்பட்ட பிரச்னையில் ஆத்திரமடைந்து உஷாவைக் கீழே தள்ளிவிட்டதும், இதனால் தலையில் பலத்த காயமடைந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரியவந்தது.

யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் உடலை காரில் கொண்டு சென்று பாடந்தொரை பகுதியில் சாலையோரமுள்ள பள்ளத்தில் வீசியிருக்கிறார். பின்னர் ஒன்றும் தெரியாததுபோல மனைவியைக் காணவில்லை என நாடகமாடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. அழுகிய நிலையில் உஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம். மோகனைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.