Published:Updated:

ஊதுபத்தி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை... கடத்தப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்!

குட்கா கடத்திவரப்பட்ட லாரி

எஸ்.ஐ கீர்த்திவாசன் லாரியின் நீளத்தை வெளி மற்றும் உள் பகுதியில் அளந்து பார்த்திருக்கிறார். இதில் உள் பகுதியில் நீளம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியை சோதனை செய்ததில் குட்கா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊதுபத்தி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை... கடத்தப்பட்ட ஒரு டன் குட்கா பறிமுதல்!

எஸ்.ஐ கீர்த்திவாசன் லாரியின் நீளத்தை வெளி மற்றும் உள் பகுதியில் அளந்து பார்த்திருக்கிறார். இதில் உள் பகுதியில் நீளம் குறைவாக இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரியை சோதனை செய்ததில் குட்கா கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

Published:Updated:
குட்கா கடத்திவரப்பட்ட லாரி

கர்நாடகா மாநிலத்திலிருந்து ஊதுபத்தி ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து, ஒரு டன் குட்கா கடத்திவரப்பட்டதைக் கண்டுபிடித்த கும்பகோணம் தனிப்படை போலீஸார், குட்கா மற்றும் லாரியைப் பறிமுதல் செய்ததுடன் இதில் தொடர்புடைய ஆறு பேரைப் பிடித்து உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

குட்கா
குட்கா

கும்பகோணம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கூறிவந்தனர். இதையடுத்து போலீஸார் அதைத் தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டுவந்தனர். இந்நிலையில் குட்கா கடத்திவரப்படுவதாக தனிப்படை போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதைத் தொடர்ந்து தனிப்படை எஸ்.ஐ கீர்த்திவாசன் தலைமையில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் ஒரு பெரிய கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு பகுதியிலிருந்து வந்திருந்த அந்த லாரி குறித்து கீர்த்திவாசன் விசாரித்தார்.

அப்போது அதில் வந்த ஆறு பேர் ஊதுபத்தி ஏற்றிவந்ததாகத் தெரிவித்துள்ளனர். போலீஸாரும் லாரிக் கதவை திறக்கச் சொல்லிப் பார்க்க ஊதுபத்தி பண்டல்கள் இருந்தன. ஆனாலும் போலீஸ் தரப்பினர் லாரிக்குள் ஏதோ இருப்பதாகச் சந்தேகித்தனர். லாரியில் குட்கா ஏற்றி வந்தவர்கள் இதையறிந்து ஊதுபத்திதான் உள்ள இருக்கு என்று உறுதிபடக் கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உடனடியாக எஸ்.ஐ கீர்த்திவாசன் லாரியின் நீளத்தை வெளி மற்றும் உள் பகுதியில் அளந்து பார்த்துள்ளார். இதில் உள் பகுதியில் நீளம் குறைவாக இருந்தது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து லாரியை சோதனை செய்ததில் ரகசிய அறை அமைத்து அதற்குள் குட்கா உள்ளிட்ட போதைப்பொருள்களைக் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீஸ் பறிமுதல் செய்த குட்கா மூட்டை
போலீஸ் பறிமுதல் செய்த குட்கா மூட்டை

இது குறித்து போலீஸ் தரப்பில் பேசினோம். `கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை அமைத்து குட்கா கடத்திவந்தனர். ஒரு டன் குட்கா மற்றும் லாரியைப் பறிமுதல் செய்ததுடன், லாரியில் வந்த ஜிதேந்திரகுமார் (27), நிகேஷ்குமார் (25), ரித்திக்குமார் (23), பிரதாப் (19), வேல்முருகன் (20), பாலமுருகன் ஆகிய ஆறு பேரைக் கைதுசெய்துள்ளோம்’ எனத் தெரிவித்தனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism