Published:Updated:

சென்னை, மும்பை அணிகள் மோதிய `குஜராத் ஐபிஎல்' - ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்ற பலே செட்டப்!

சூதாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல்

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ஜெர்ஸிகளுடன் போலியான ஐபிஎல் தொடரை ஒளிபரப்பி ரஷ்யர்களை ஏமாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் கைது.

சென்னை, மும்பை அணிகள் மோதிய `குஜராத் ஐபிஎல்' - ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்ற பலே செட்டப்!

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ஜெர்ஸிகளுடன் போலியான ஐபிஎல் தொடரை ஒளிபரப்பி ரஷ்யர்களை ஏமாற்றி சூதாட்டத்தில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த மோசடி கும்பல் கைது.

Published:Updated:
சூதாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல்

குஜராத்தில் உள்ள மோலிபூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 21 பேர், ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றப் போலியான ஐபிஎல் தொடர் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தப் போலியான ஆட்டத்தை உண்மை என நம்ப வைக்கக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு தலா 400 ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் ஜெர்சிகளுடன் விளையாட வைத்துள்ளனர்.

சூதாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல்
சூதாட்டத்தில் ஈடுபட்ட மோசடி கும்பல்

இதில் அணியின் வெற்றி தோல்விகளைத் தங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துத் திட்டமிட்டு ஆட்டத்தை நடத்தி, அதை உண்மையான ஐபிஎல் தொடர் போலக் காட்சிப்படுத்தி யூடியுப் பக்கத்தில் ஒளிபரப்பியுள்ளனர். இதற்காகப் பார்வையாளர்கள் கைதட்டி கரகோஷம் போடும் போலியான ஆடியோக்களைப் பயன்படுத்தி, பிரபல கிரிக்கெட் வர்ணனை பேச்சாளரான ஹர்ஷா போக்லேவின் குரலில் மிமிக்ரி செய்வதற்காக ஒருவரையும் நியமித்து இதை உண்மையென நம்ப வைத்துள்ளனர்.

இந்தச் சூதாட்டத்திற்காக டெலிகிராம் சேனல் ஒன்றையும் உருவாக்கி அதன் மூலம் ரஷ்ய சூதாட்டக்காரர்களிடம் பந்தயம் கட்டி பண மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர். இதை அறிந்த போலீஸார் இந்தச் சூதாட்ட மோசடியில் ஈடுபட்ட நபர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கிரிக்கெட் வர்ணனை பேச்சாளரான ஹர்ஷா போக்லே மற்றும் ஆனந்த் மஹிந்தரா உள்ளிட்ட பலரும் இதை தங்கள் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு நூதனமான இந்த மோசடி குறித்து ஜாலியாகக் கலாய்த்து வருகின்றனர்.