Published:Updated:

குஜராத்: கலப்புத் திருமணம்... ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த இரண்டு கொலைகள்!

கொலை

குஜராத்தில் கலப்புத் திருமணம் காரணமாக நடந்த இரண்டு கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

குஜராத்: கலப்புத் திருமணம்... ஒரு மணி நேர இடைவெளியில் நடந்த இரண்டு கொலைகள்!

குஜராத்தில் கலப்புத் திருமணம் காரணமாக நடந்த இரண்டு கொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

Published:Updated:
கொலை

குஜராத் மாநிலம், ஜாம் நகர் மாவட்டத்திலுள்ள ஹப்பா பகுதியில் ராம் சோரியா (30) என்பவர் வசித்துவந்தார். இவர் கடந்த ஆண்டு சதுபா ஜாலா என்பவரின் மகளை, கலப்புத் திருமணம் செய்துகொண்டார். இரு குடும்பத்தாருக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கலப்புத் திருமணம் செய்துகொண்ட ராம் சோரியாவைக் கொலை செய்ய பெண் வீட்டார் திட்டம் தீட்டியிருக்கின்றனர். அதன்படி, ராஜ்கோட் சாலை சந்தையில் ராம் சோரியா இருப்பதாக சதுபா ஜாலாவின் ஆட்கள் அவருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். சதுபா ஜாலா போனில் அவரைக் கொலை செய்து விடுமாறு கூறியதையடுத்து, அவரின் ஆட்கள் ராம் சோரியாவைக் கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

கொலை
கொலை

இந்த நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் தன் சகோதரனின் எதிர்பாராத கொலையால் ஆத்திரமடைந்த ராம் சோரியாவின் சகோதரன் லக்தீர், பெண் வீட்டாரைப் பழிவாங்க வேண்டும் என முடிவு செய்திருக்கிறார். அதற்காக சதுபா ஜாலாவின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். வீட்டில் சதுபா ஜாலாவின் மனைவி ஆஷாபா இருந்திருக்கிறார். கோபத்துடன் சென்ற லக்தீர், அவரைக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, போலீஸார் இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அந்தப் பகுதி காவல்துறையினர், ``தன் மகளை கலப்புத் திருமணம் செய்துகொண்ட இளைஞரை, பெண்ணின் தந்தை ஆட்களை ஏவிக் கொலை செய்திருக்கிறார். தன் தம்பியைக் கொலை செய்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக இறந்தவரின் அண்ணன், பெண்ணின் தாயாரைக் கொலை செய்திருக்கிறார். இரண்டு கொலைச் சம்பவங்களிலும் கொலையாளிகள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை, தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடிவருகிறோம்" என்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism