Published:Updated:

`வேலைக்குப் போகமாட்டியா?' - திட்டித்தீர்த்த மனைவியின் நாக்கை அறுத்த கணவர்

குஜராத்தில் வேலைக்குப் போகச் சொன்ன மனைவியின் நாக்கை கணவர் அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Knife
Knife ( Representational Image )

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தைச் சேர்ந்தவர் தஸ்லீம். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2004-ம் ஆண்டு திருமணம் நடந்தது. அந்தத் திருமணம் 5 வருடத்தில் முறிந்து போனது. முதல் கணவரிடமிருந்து சட்டரீதியாக விவாகரத்து பெற்று விட்டார். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆயுப் மன்சூரி இரண்டாம் திருமணம் செய்துகொண்டார்.

love
love

ஆயுப் மன்சூரிக்கு ஏற்கெனவே இரண்டு திருமணங்கள் நடந்துள்ளன. மூன்றாவதாக தஸ்லீமை திருமணம் செய்துள்ளார். ஆயுப் தனது இரண்டாவது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்ததை மறைத்து தஸ்லீமை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்தவர், அவர்களை விட்டு வருமாறு கூறியுள்ளார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு வீட்டில் தொடர்ச்சியாக சண்டைகள் நடந்து வந்துள்ளன. இருப்பினும் அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். கணவர் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்ததைக் கண்டித்துள்ளார் தஸ்லீம். இந்நிலையில்தான் மனைவியின் நாக்கை ஆயுப் அறுத்துள்ளார். இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை மேற்கொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசியல் கட்சித் தலைவரை சந்தித்த ஜோலி; 2-வது கணவரின் தலையீடு! -கேரள சீரியல் கொலையில் திடீர் திருப்பம்

அந்தப்பெண் அளித்த புகாரில், ``நான் எனது கணவரிடம் வேலைக்குச் செல்லுங்கள் அல்லது சொந்தமாக தொழில் தொடங்குங்கள் எனக் கூறினேன். இதனால் ஆத்திரமடைந்தவர் என்னைக் கடுமையாகத் தாக்கினார். நான் எனது திருமண உறவைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இந்தக் கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொண்டேன். கடந்த வாரம் பணம் கேட்டு என்னைத் தொந்தரவு செய்தார். நான் தராததால் கடுமையாக நடந்து கொண்டார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை இரவு 11 மணியளவில் என்னைப்பார்த்து புன்னகையித்தவாறே என்னுடைய நாக்கில் முத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறினார். நான் அவ்வாறே செய்ய சம்மதித்தேன். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு எனது நாக்கை அறுத்தார். உடனடியாக எனது வீட்டை வெளிப்பக்கமாகப் பூட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து எனது சகோதரிக்கு வீடியோ கால் செய்து எனது நிலையைக் காட்டினேன் என்னால் பேசமுடியவில்லை. இதைக்கண்டதும் சகோதரி என் வீட்டுக்கு விரைந்தார். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் என்னை மீட்டார்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 police
police

சம்பவத்தை அடுத்து அந்தப் பெண்ணை மீட்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக சர்தார் வல்லபபாய் பட்டேல் மருத்துவமனையில் அனுமதித்தனர். அந்தப்பெண்ணின் நாக்கை அறுவை சிகிச்சை மூலம் ஒட்டவைத்தனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், ``அந்தப்பெண்ணின் கணவரைத் தேடிவருகிறோம். கடுமையான ஆயுதங்களைக் கொண்டு தாக்கியது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றனர்.