Published:Updated:

பிறந்தநாளில் பள்ளி மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூடு! - கலிபோர்னியாவில் நடந்த சோகம்

அமெரிக்காவில் தொடரும் பள்ளி மாணவர்களின் துப்பாக்கி கலாசாரம் மீண்டும் இரு உயிர்களைப் பலி கொண்டுள்ளது.

அமெரிக்க துப்பாக்கிச் சூடு
அமெரிக்க துப்பாக்கிச் சூடு

தெற்கு கலிபோர்னியா, சாண்டா க்ளாரிடாவில் அமைந்துள்ள சாகஸ் ஹை ஸ்கூலில் (Saugus high School) 16 வயது ஆசிய மாணவர் ஒருவர் துப்பாக்கியால் ஐந்து பேரைச் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதில் ஒரு மாணவி உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே இறந்திருக்கிறார்கள்.

california school shooting
california school shooting
AP

விநாடிகளில் நடந்த இந்தக் கோர சம்பவத்துக்குப் பிறகு ஐந்து குண்டுகளை செலுத்தி தன்னையும் அவர் சுட்டுக்கொண்டுள்ளார். அதன் பிறகுதான் மொத்த பள்ளியும் அலர்ட் ஆகியிருக்கிறது. அமெரிக்க நேரப்படி வியாழன் அன்று 7.38-க்கு இந்தத் தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இரண்டு நிமிடத்தில், அதாவது 7.40-க்கு காவல்துறை அந்தப் பகுதியில் சூழ்ந்து, மற்ற அனைத்து மாணவர்களையும் பாதுகாப்பாக வெளியேற்றியிருக்கிறார்கள். மோசமான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி மூடப்பட்டுள்ளது

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனுக்கு இன்று பிறந்தநாள் என்று கூறப்படுகிறது. அவனின் தந்தை இரு வருடங்களுக்கு முன்பு இறந்திருக்கிறார். 45 காலிபர் செமி ஆட்டோமேடிக் பிஸ்டலை பள்ளி வளாகத்துக்கு எடுத்துச் சென்று இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். எதற்காக சுட்டார், எப்படி நடந்தது என்பதை அங்கிருக்கும் கண்காணிப்பு கேமராக்களைக் கொண்டு விசாரித்துவருகிறார்கள்.

california school shooting
california school shooting
AP

துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் நண்பர்கள் கூறும்போது, ``அவர் யாரிடமும் அதிகம் பேச மாட்டான். அமைதியாகவே இருப்பான். இன்று ஏன் இப்படிச் செய்தான் என்பது தெரியவில்லை” என்று தெரிவித்தார்கள்.

துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மாணவன் மிகவும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

california school shooting
california school shooting
AP

இந்த நிலையில், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், மக்கள் மேற்கொண்டு அச்சப்படத் தேவையில்லை என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. பாதுகாப்புக் காரணங்கள் கருதி, அப்பகுதியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.