Published:Updated:

``ஒரு மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி கொடுத்தால்தான்..!" - கல்வி நிலையத்தை மிரட்டும் ஹேக்கர்கள்

மிரட்டும் ஹேக்கர்கள்

``கே.என்.மோடி கல்வி அறக்கட்டளை மற்றும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து முக்கியமான தரவுகளைத் திருட ஹேக்கர்கள் ‘லாக்பிட் பிளாக்’ வைரஸைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்." - காவல்துறை

``ஒரு மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி கொடுத்தால்தான்..!" - கல்வி நிலையத்தை மிரட்டும் ஹேக்கர்கள்

``கே.என்.மோடி கல்வி அறக்கட்டளை மற்றும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து முக்கியமான தரவுகளைத் திருட ஹேக்கர்கள் ‘லாக்பிட் பிளாக்’ வைரஸைப் பயன்படுத்தியிருக்கிறார்கள்." - காவல்துறை

Published:Updated:
மிரட்டும் ஹேக்கர்கள்

உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத்திலுள்ள கே.என்.மோடி அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த கே.என்.மோடி கல்வி அறக்கட்டளை பொறியியல், மருத்துவம் உட்பட எட்டு கல்லூரிகளையும், ஒரு பள்ளியையும் நடத்திவருகிறது. இந்த நிலையில், இந்த அறக்கட்டளை சார்பில் சந்தீப் குமார் யாதவ் என்பவர் காவல்துறையிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார்.

ஹேக்கர்
ஹேக்கர்

அந்தப் புகாரில், ``கே.என்.மோடி அறக்கட்டளையில் பல்வேறு கல்வி நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன. இந்த நிலையில், யாரோ எங்கள் நிறுவனத்தின் கம்யூட்டர்களை ஹேக் செய்து, எங்கள் மாணவர்கள், நிறுவன ஊழியர்களின் தகவல்களை திருடி, எங்கள் நிறுவன கம்யூட்டர்களிலிருந்து அழித்துவிட்டார்கள். மேலும், இந்தச் சிக்கலை தீர்க்க வேண்டுமென்றால் ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியைக் கேட்டிருக்கிறார்கள். எனவே, குற்றவாளிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
ஹேக்கர்
ஹேக்கர்

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பு, ``காஸியாபாத்தின் மோடிநகர்ப் பகுதியிலுள்ள கே.என்.மோடி கல்வி அறக்கட்டளை மற்றும் அதன் துணை நிறுவனங்களிடமிருந்து முக்கியமான தரவுகளைத் திருட ஹேக்கர்கள் ‘லாக்பிட் பிளாக்’ வைரஸைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்போது ஹேக்கர்களைக் கண்டுபிடிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 507 ( குற்றவியல் மிரட்டல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்துடன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் இரண்டு மர்ம நபர்கள்மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறது.